சாகித்ய அகாடமி விருதுகளை வென்ற தமிழ் நாவல்கள் : எழுத்தாளர்கள் நெகிழ்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
23 June 2023, 4:46 pm

சாகித்ய அகாதமி விருது (Sahitya Akademi Award), சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழில் ஆதனின் பொம்மை என்ற நாவலை எழுதிய தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் உதயசங்கருக்கு சாகித்ய அகாடமியின் உயரிய விருதான பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், யுவ புரஸ்கார் விருது திருக்கார்த்தியல் என்ற சிறுகதையை எழுதிய எழுத்தாளர் ராம்தங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 1960ஆம் ஆண்டு பிறந்தவர் எழுத்தாளர் உதயசங்கர். நீலக்கனவு, யாவர் வீட்டிலும், பிறிதொரு மரணம் உள்ளிட்ட சிறுகதை நூல்களை எழுதியுள்ளார்.

விருது அறிவிக்கப்பட்டது குறித்து நெகிழ்ச்சியடைந்த உதயசங்கர், தமிழர்களின் தொன்மை, நாகரிகம் குறித்து எழுதப்பட்ட நாவலுக்கு விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சி. கீழடி பற்றி இளையோர் அறியும் வகையில் எழுதப்பட்ட நாவலுக்கு விருது கிடைத்திருக்கிறது

வரலாற்றை இளையோரிடம் சரியாக கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்திலேயே நாவல் எழுதியதாக மகிழ்ச்சியுடன் கூறினார்.

  • Sivakarthikeyan Dhanush in Party Dance Video சிவகார்த்திகேயனுடன் குத்தாட்டம்.. VIBE MODEல் தனுஷ்… : மாஸ் வீடியோ!
  • Views: - 465

    0

    0