கரையோரம் கிடந்த சைதை துரைசாமி மகன் வெற்றியின் உடைகள், சூட்கேஸ்கள் : 15 கி.மீ தூரம்.. தேடும் பணி தீவிரம்!

Author: Udayachandran RadhaKrishnan
8 February 2024, 4:17 pm

கரையோரம் கிடந்த சைதை துரைசாமி மகன் வெற்றியின் உடைகள், சூட்கேஸ்கள் : 15 கி.மீ தூரம்.. தேடும் பணி தீவிரம்!

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி கடந்த ஞாயிறன்று இமாச்சல் பிரதேசம் சென்றிருந்தார். அப்போது சட்லஜ் ஆற்றில் அவரது கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் காரில் இருந்த ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், காரில் பயணம் செய்த வெற்றி துரைசாமி எங்கே என்பது தெரியவில்லை.

கார் ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டு நதியில் கார் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இரண்டு நாட்களாக அவரை தேடும் பணி தீவிரம் அடைந்திருந்தது. தற்போது மூன்றாவது நாளான இன்றும் வெற்றியை தேடும் பணியை தீவிர படுத்தியுள்ளனர்.

விபத்து நடந்த இடத்திலிருந்து 15 கி.மீ சுற்றளவில் தேடும் பணி நடைப்பெற்று வருகிறது. விபத்து நடந்த இடத்தில் அவரது ஐ-போனை மீட்பு குழுவினர் கைப்பற்றி உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

அதை கைப்பற்றி அவர் கடைசியாக யாரிடம் பேசினார், என்னென்ன பேசினார் என்னும் தகவலையும் சேகரித்து வருகிறார்கள். மறுபக்கம் சட்லஜ் ஆற்றில் கார் விழுந்த 15 கி.மீ. தூர சுற்றளவில் வெற்றியை தேடும் பணிகள் நடந்து வருகின்றன. சுமார் 5 நாட்களாக வெற்றி துரைசாமியை மீட்பு படையினர் தேடி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று வெற்றி துரைசாமியின் உடைகள் கிடைத்தன. அவருடைய சூட்கேஸ், உடமைகள் கிடைத்துள்ளன.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்