கள்ளச்சந்தையில் களைகட்டிய மது விற்பனை… நள்ளிரவில் களவாடிய மதுப்பிரியர்கள் : ஷாக் சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
14 January 2024, 4:34 pm

கள்ளச்சந்தையில் களைகட்டிய மது விற்பனை… நள்ளிரவில் களவாடிய மதுப்பிரியர்கள் : ஷாக் சிசிடிவி காட்சி!!

கள்ள சந்தையில் விற்பனைக்கு வைத்திருந்த மதுபாட்டில்களை திருடிச் செல்லும் நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது…

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா அய்யலூர் அருகே காட்டுப்பகுதியில் கள்ளச் சந்தை மதுபான விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் நேற்று இரவு அய்யலூர் பேருந்து நிறுத்தம் அருகே சைக்கிள் ஸ்டாண்ட் பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது வழக்கம்.

இதனை அறிந்த புத்தூர் பிச்சம்பட்டியை சேர்ந்த கருப்பையா என்பவர் இரவு 1 மணியளவில் உள்ளே புகுந்து சாக்கு பையில் வைக்கப்பட்டிருந்த மதுபாட்டிலை உள்ளே சென்று திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கள்ளச் சந்தையில் மதுபான விற்பனை செய்வதே பெரிய குற்றம் அதையும் திருடும் நபரால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!