திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் குழந்தைகள் காப்பகம் அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆகியவற்றில் தினசரி மதிய உணவிற்காக தமிழக அரசு சார்பில் லட்சக்கணக்கான முட்டைகள் இலவசமாக பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் துறையூரிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் வங்கி அருகே உள்ள பிரபல தனியார் உணவகம் தேநீர் கடையுடன் இயங்கி வருகிறது. இந்நிலையில் அந்த உணவகத்தில்தமிழக அரசின் முத்திரையிட்ட சத்துணவு முட்டைகள் தடையின்றி மிகக் குறைந்த விலையில் ரூபாய் இரண்டுக்கு கொள்முதல் செய்யப்பட்டு பொதுமக்களிடம் ரூபாய் 15க்கு மேல் ஆம்லேட் உள்பட பல்வேறு விதமான முட்டை உணவுகள் விற்கப்பட்டு வருகின்றது.
இதனை கடைக்கு அங்கன்வாடி மையத்தில் இருந்து முட்டை பாமாயில், அரிசி, பருப்பு உள்பட அனைத்து பொருட்களை அந்த தனியார் உணவகத்திற்கு தினந்தோறும் விற்பனை செய்து வருவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் படிக்க: இளைஞரின் மரணத்தில் திடீர் திருப்பம்.. அடித்துக் கொலை என உறவினர்கள் மறியலால் பரபரப்பு!
இந்நிலையில் சம்பந்தப்பட்ட உணவகத்தில் தமிழக அரசின் சத்துணவு முட்டைகள் இருப்பதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த தகவல் துறையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் துறையூரில் உள்ள தனியார் உணவகங்களில் நேரில் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று காலை ஆய்வு செய்து அதிகாரிகள் துறையூர் வட்டாட்சியர் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் வடிவேல் ஆகியோர் கடைக்கு சீல் வைத்தார்.
கடை உரிமையாளர் ரத்தினம், மதுராபுரி ஊராட்சி ஒன்றிய நிலைப்பள்ளி சத்துணவு அமைப்பாளர் வசந்தகுமாரி ஆகியோரை கைது செய்து உணவகம் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரசிகர்கள் செய்வது மிக தவறு தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக இருப்பவர் எச் வினோத்,இவர் இயக்கிய…
கடலூரில், வேறு ஒருவரைக் காதலித்த நிலையில், திருமணம் முடித்த கணவருக்கு, மனைவி ஜூஸில் விஷம் கலந்து கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.…
ட்ரெண்டிங் NO1-ல் குட் பேட் அக்லி ஆதிக் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர்…
சின்னத்திரை மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். இவர் சக சீரியல் நடிகரை திருமணம்…
உத்தரகாண்டில் டிஜிட்டல் அரஸ்டில் 18 நாட்கள் பேராசிரியர் சிக்கி 47 லட்சத்தை இழந்தது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
This website uses cookies.