போதைக்காக வலி நிவாரணி மாத்திரை விற்பனை : சிக்கிய இளைஞர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 April 2023, 8:03 pm

திருப்பூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மருதாச்சலபுரம் பகுதியில் ‘டேப்பென்டடோல்’ எனப்படும் வலி நிவாரணிக்காக பயன்படுத்தப்படும் இந்த மாத்திரைகளை போதைக்காக மருத்துவரின் எந்தவித பரிந்துரை கடிதமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்த ராஜ்குமார் மற்றும் ஆனந்த் ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் இருவரும் இந்த மாத்திரைகளை மைசூரில் இருந்து வாங்கி வந்து திருப்பூரில் போதை பழக்கத்திற்கு அடிமையான இளைஞர்களிடம் இதனை விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. 40 மாத்திரைகளின் மதிப்பு 12 ஆயிரம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?