நாளை முதல் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை… விலை எவ்வளவு தெரியுமா? வெளியான அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
3 July 2023, 1:38 pm

தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக அமைச்சர் பெரிய பெரியகருப்பன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, நியாயவிலை கடைகளில் தக்காளி விற்பனை செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் பெரியகருப்பன், தக்காளி விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தக்காளி விலையேற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தக்காளி விலை உயர்வு என்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களிலும் தான்.

மழை காரணமாக தக்காளி விளைச்சல் குறைந்துள்ளது. கடந்த காலங்களில் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் தக்காளி சாகுபடி பரப்பளவை குறைத்துவிட்டனர்.

ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்று தக்காளி விலை உயர்கிறது. அடுத்தாண்டு தக்காளி விலையேற்றம் வராதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60 க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றார்.

இதை தொடர்ந்து பேசிய அமைச்சர், சென்னையில் நாளை முதல் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என அறிவித்தார். சென்னையில் நாளை முதல் 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்படும்.
முதல்கட்டமாக சென்னையில் 3 பகுதிகளில் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும். அதன்படி, வடசென்னையில் 32 ரேஷன் கடைகளில், மத்திய சென்னையில் 25, தென் சென்னையில் 25 என மொத்தம் 82 நியாயவிலை கடைகளில் தக்காளி நாளை முதல் விற்பனை செய்யப்பட உள்ளது.

ரேஷன் கடைகளில் கொள்முதல் விலையான ரூ.60க்கு தக்காளி விற்பனை செய்யப்படும். மேலும், அனைத்து மாவட்டங்களிலும் ஒரு சில ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யும் திட்டம் விரிவுபடுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். அதன்படி, நாளை முதல் 111 கடைகளில் குறைந்தது தக்காளி ஒரு கிலோ 50 – 60 ரூபாய்க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

  • vadivelu trying to hit the car of goundamani and senthil car கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?