திண்டுக்கல் : வேடசந்தூர் அருகே பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நடந்த ஆட்டுச் சந்தையில் 2 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூரில் வாரம்தோறும் வியாழக்கிழமையன்று ஆடு மற்றும் கோழி சந்தை நடைபெறும். திண்டுக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற சந்தையாக அய்யலூர் ஆட்டுச்சந்தை திகழ்கிறது.
இதனால் திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் ஆடு மற்றும் கோழிகளை மொத்தமாக விலைக்கு வாங்க அதிக அளவில் அய்யலூர் சந்தைக்கு வருகின்றனர்.
வரும் ஞாயிற்றுக்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இஸ்லாமியர்கள் பக்ரீத் நாளில் குர்பானி கொடுப்பதற்காக அதிக அளவில் ஆடுகளை வாங்குவது வழக்கம். இதையொட்டி இன்று அய்யலூரில் கூடிய ஆட்டுச் சந்தை களை கட்டியது.
அதிகாலை முதலே ஏராளமான வியாபாரிகளும், விவசாயிகளும் சந்தையில் குவிந்தனர். இதனால் சந்தையில் கூட்டம் அலை மோதியது. வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளையும் சேவல்களையும் வாங்கி வண்டிகளில் ஏற்றிச் சென்றனர். வெள்ளாடுகளை காட்டிலும் செம்மறி ஆடுகள் அதிக அளவில் விற்பனை ஆனது.
நேற்று ஒரு கிலோ நாட்டுக்கோழி ரூபாய் 300 முதல் 350 வரையிலும், சண்டைக்கு பயன்படும் கட்டு சேவல்கள் 2 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலும், நல்ல திடகாத்திரமான கிடா ஆடுகள் 20 முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. 10 கிலோ எடையுள்ள வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் ரூபாய் 6000 முதல் 7000 வரையிலும் விற்பனை செய்யப்பட்டன.
இது குறித்து வியாபாரிகள் கூறியபோது இன்று ஆட்டுச் சந்தையில் விற்பனை நல்ல முறையில் இருந்தது. சுமார் 2 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடந்துள்ளதாக தெரிவித்தனர்.
ஆடுகள் விற்பனைக்கு வந்த விவசாயிகள் கூறியபோது பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற சந்தையில் தங்கள் கால்நடைகளுக்கு நல்ல விலை கிடைத்ததாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.