தனியார் தீம் பார்க்கில் விடுமுறையை கொண்டாட சென்ற சகோதரர்கள்… 13 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம் ; போலீசார் விசாரணை!!

Author: Babu Lakshmanan
12 May 2023, 1:30 pm

தனியார் தீம் பார்க் தண்ணீரில் விளையாடிய 13 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் மல்லூரில் பிரபல தனியார் தீம் பார்க் அமைந்துள்ளது. இதில், சேலம் கிச்சிப்பாளையம் எருமாபாளையம் சாலையில் பகுதியிலுள்ள ரஞ்சித் – உஷா தம்பதியின் 13 வயது சிறுவன் சௌடேஸ்வரன் மற்றும் அவரது சகோதரர் துவேஸ்வரன் ஆகியோர் இன்று காலை விளையாட சென்றுள்ளனர்.

இருவரும் தண்ணீரில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்த போது, 13 வயதான சௌடேஸ்வரன் திடீரென தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக வெண்ணந்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளி விடுமுறையையொட்டி ஏராளமானோர் தனியார் தீம் பார்க்கிற்கு வந்து செல்லும் நிலையில், 13 வயது சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி