சேலம் அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் திருப்பம்.. சிக்கிய திமுக கவன்சிலரின் கணவர் : பரபர வாக்குமூலம்!

Author: Udayachandran RadhaKrishnan
4 July 2024, 2:47 pm

சேலம் மாவட்டம் கொண்டாலம்பட்டியை சேர்ந்த அதிமுக பிரமுகரும், ரியல் எஸ்டேட் தொழிலதிபருமான சண்முகம், நேற்று இரவு அம்பாள் ஏரி பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பி சென்று கொண்டிருக்கையில் மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யாமல் சண்முகம் உடலை வாங்க மாட்டோம் என சண்முகம் குடும்பத்தினரும், அதிமுக கட்சியை சேர்ந்தவர்களும் சேலம் மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.

சேலம் மாநகர் காவல்துறையினர் சார்பில் 5 தனிப்படைகள் அமைத்து சண்முகம் கொலை தொடர்பானவர்களையும், சந்தேகத்தின் பெயரிலும் சிலரை கைது செய்து தங்கள் விசாரணையை தொடங்கினர்.

இந்த கொலை சம்பவத்தில் சந்தேகிக்கும் முக்கிய நபரான திமுக பிரமுகர் சதீஸ் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் திமுக கவுன்சிலர் தனபாக்கியம் என்பவரது கணவர் ஆவார்.

சதீஸ் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • ajith talks about pahalgam terror attack நமக்குள்ளயே சண்டை போட்டுக்காதீங்க- பஹல்காம் தாக்குதல்; அஜித் கொடுத்த பதிலடி…