சேலம் மாநகராட்சி 14வது வார்டு அதிமுக வேட்பாளரின் மனு தள்ளுபடி: தண்ணீர் வரி, வீட்டு வரி கட்டவில்லை என கூறி நிராகரிப்பு..!!

Author: Rajesh
5 February 2022, 12:55 pm

சேலம்: சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டில் அதிமுக வேட்பாளரின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவுபெற்றது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 75,000 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த 28ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் நேற்று நிறைவடைந்தது. வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கு வரும் 7ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று மாலையே இறுதிவேட்பாளர் பட்டியல் வெளியாகிறது. பிப்ரவரி 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.பிப்ரவரி 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்நிலையில், சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டில் அதிமுக வேட்பாளரின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வேட்பு மனு பரிசீலனையில் அதிமுக வேட்பாளர் நடேசனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.

வேட்பு மனு நிராகரிப்பிற்கான காரணம் கேட்டதற்கு வீட்டுவரி மற்றும் தண்ணீர் வரி கட்டாததால் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அனைத்து வரிகளையும் சரியாக கட்டியதாக வேட்பாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1208

    0

    0