போலி டிக்கெட்டை கொடுத்து நூதன கொள்ளை… கையும் களவுமாக மாட்டிய அரசுப் பேருந்து நடத்துநர் ; வைரலாகும் ஷாக் வீடியோ..!!

Author: Babu Lakshmanan
17 November 2023, 1:16 pm

சேலம் பணிமனையில் பணிபுரியும் அரசு பேருந்து நடத்தினர் போலி டிக்கெட்டுக்களுடன் வடலூரில் பரிசோதனை செய்யும் அதிகாரிகளிடம் கையும் காலமாக சிக்கினார்.

சேலத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த குளிரூட்டப்பட்ட அரசு பேருந்தில் வடலூர் பகுதியில் வந்த போது, டிக்கெட் பரிசோதனை செய்யும் அதிகாரிகள் திடீரென ஏறி பயணிகளிடம் டிக்கெட்டை வாங்கி பரிசோதனை செய்தனர். அப்போது, பயணிகள் வைத்திருக்கும் டிக்கெட் போலியானதாக தெரிகிறது. அடுத்தடுத்து, பயணிகளும் அதுபோன்று டிக்கெட்டை காண்பித்ததால் குழப்பம் அடைந்த டிக்கெட் பரிசோதனை அதிகாரிகள், நடத்துனரிடம் கேட்டபோது விழி பிதுங்கி நின்றார்.

அப்போது, அவர் பையை பிடுங்கி பார்த்தபோது போலி டிக்கெட் இருப்பது தெரியவந்தது. மேலும், அவர் பேண்ட் பாக்கெட்டிலும் போலி டிக்கெட்டுகள் அதிகமாக வைத்திருந்ததை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், விரைவு பேருந்தை அனைத்து பேருந்து நிறுத்தத்திலும் நிறுத்தி பயணிகளை ஏற்றி போலி டிக்கெட் கொடுத்து தில்லாலங்கடி வேலையில் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் உடைந்தையுடன் செய்து வந்தது அம்பலமானது.

மேலும், டிக்கெட் பரிசோதனை அதிகாரிகள் கேட்டபோது நடத்துனர் அமைதி காத்ததால், சற்று எரிச்சல் அடைந்து அவரிடம் உள்ள பேண்ட் பாக்கெட்டுகளில் இருந்த போலி டிக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும், பயணிகளுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படாமல் இருக்க பேருந்தை எங்கும் நிறுத்தாமல், வடலூரில் இருந்து சிதம்பரம் நேரடியாக கொண்டு வந்து பயணிகளை இறக்கி விட்டு விட்டு மீண்டும் அந்த பேருந்தை சேலம் பணிமனைக்கு அனுப்பி வைத்தனர்.

https://player.vimeo.com/video/885547000?badge=0&autopause=0&quality_selector=1&player_id=0&app_id=58479

அதேபோன்று, நடத்துனர் மற்றும் ஓட்டுநரையும் சேலம் பணிமனை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அரசு பேருந்தில் அரசு கொடுக்கும் டிக்கெட்டை வழங்காமல் போலி டிக்கெட் கொடுத்து நூதன முறையில் கொள்ளை நடத்திய நடத்துனர் மற்றும் ஓட்டுநர் சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ