உணவில் கிடந்த பூச்சி… டிரிப்ஸ் போட்டபடியே மருத்துவமனைக்கு வந்த நர்சிங் மாணவிகள் ; களத்தில் இறங்கிய ஆட்சியர்..!!!

Author: Babu Lakshmanan
27 May 2024, 6:57 pm

சேலம் தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகள் 60க்கும் மேற்பட்டோர் சாப்பிட்ட உணவால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் வீராணம் அருகே உள்ள ஆச்சாங்குட்டப்படி பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 400-க்கும் மேற்பட்ட பயின்று வருகின்றனர். இந்த நிலையில், BSC நர்சிங் படிக்கும் 60க்கும் மேற்பட்ட மாணவிகள் நேற்று மதியம் சாதம் மற்றும் பச்சை பயிறு குழம்பு உட்கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க: அரசு வேலை வாங்கித் தருவதாக பணத்தை கறந்த போலி தாசில்தார்… ரூ.16 லட்சம் அபேஸ் செய்த டிரைவர் கைது!!!

பின்னர் நேற்றிரவு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 60க்கும் மேற்பட்ட மாணவிகள் சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு மாணவிகள் அழைத்து வந்து அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கு முன்பாக சிகிச்சைக்காக கல்லூரி வாகனத்தில் குளுக்கோஸ் கட்டியவாறு மாணவிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தபடியே, சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகத்திடம் வீராணம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், 60க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு எவ்வாறு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது,உணவு முறையாக தயார் செய்யப்பட்டதா உள்ளிட்டவைகள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் உணவு சமைத்த ஊழியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி உணவு கூடத்தில் அதிரடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி நேரில் வருகை தந்து மாணவிகளிடம் நலம் விசாரித்து மருத்துவரிடம் முறையான சிகிச்சை அளிக்கும்படி அறிவுறுத்தல் வழங்கினார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் கூறுகையில் உணவு முறையாக சமைப்பதில்லை என்றும், உணவு பூச்சி இருந்ததால் தான் வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக மாணவிகள் தெரிவித்தனர். உணவு சுகாதாரமான முறையில் சமைக்கவில்லை என்று பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை; இதற்கு முன்பாக உணவு சாப்பிடுவதால் உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் மாணவிகள் கூறினர்.

கல்லூரி மாணவிகளின் பெற்றோர் பேசுயதில், கல்லூரி விடுதியில் உணவில் பூச்சி இருந்தால் எடுத்துப் போட்டுவிட்டு சாப்பிடுங்கள் என்று மாணவிகளிடம் கல்லூரி நிர்வாகம் தெரிவிப்பதாக பெற்றோர் தெரிவித்தனர். மேலும், சுகாதாரமான முறையில் உணவு சமைப்பதில்லை. இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 379

    0

    0