கடன் தள்ளுபடியில் நெருக்கடி தரும் அரசியல் புள்ளிகள்… 24ம் தேதி போராட்டத்தை அறிவித்த தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கம்..!!

Author: Babu Lakshmanan
3 April 2023, 1:43 pm

நாமக்கல் : 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சென்னையில் வருகிற 24 தேதி தர்ணா போராட்டம் நடைபெறும் என்று மாநில சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் சார்பாக 12 அம்ச கோரிக்கை வலியுறுத்தி நாமக்கல்லில் பேரணி நடைபெற்றது. இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தொடக்க கூட்டுறவு சங்க கடன்கள் பணியாளர்களது கோரிக்கைகள் தள்ளுபடி, சங்கங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி, நடைமுறை சிரமங்கள் ஆகியவற்றை களைந்து விட வேண்டி 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 600க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். அதன் பிறகு அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் குப்புசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, அவர் கூறுகையில், “கடன் தள்ளுபடி செய்வது தொடர்பாக சங்கங்களுக்கு அரசியல் தலைவர்களின் நெருக்கடி உள்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பலகட்ட போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களை செய்துள்ளோம். ஆனால், அரசு இதுவரை கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. ஆகையால், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 24ம் தேதி கூட்டுறவு சங்க அமைச்சர் மற்றும் முதல்வரை சந்தித்து மனு கொடுக்க இருக்கிறோம். மனுவை ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் தர்ணா போராட்டம் செய்ய முடிவு செய்துள்ளோம், எனத் தெரிவித்தார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ
  • Close menu