சேலத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் திரையரங்கின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டத்தில் பல திரையரங்குகளில் நடிகர் அஜித்குமார் நடித்துள்ள துணிவு திரைப்படத்தின் சிறப்பு காட்சி வெளியிடப்பட்டது. நள்ளிரவு 1 மணிக்கு திரையிடப்பட்ட நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படத்தை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ARRS மல்டிப்ளக்ஸ் திரையரங்கு முன்பு கூடினர்.
தொடர்ந்து பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும், அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அஜித் ரசிகர்கள் அதிவேகமாக வாகனத்தை இயக்கி வந்தனர். தொடர்ந்து, அந்த வழியாக வந்த காரின் மீது ஏரியும், மேலே எழும்பி வெடிக்கும் பட்டாசுகளை தலை மேல் வைத்து வெடித்தும் அஜித் ரசிகர்கள் அலப்பறையில் ஈடுபட்டனர்.
நேரம் ஆக ஆக திரையரங்கின் கேட் திறக்கப்படாததால் அஜித் ரசிகர்கள் கேட்டின் மீது ஏறி திரையரங்குக்குள் நுழைந்தனர். அப்போது, உற்சாக மிகுதியில் திரையரங்கில் இருந்த கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர். கண்ணாடி உடைத்த போது அஜித்தின் ரசிகர் ஒருவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், கூட்ட நெரிசல் சிக்கிய அஜித் ரசிகரின் வலது கால் முறிந்தது. வழியில் துடித்த அந்த நபரை சக ரசிகர்கள் திரையரங்கில் இருந்து மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அப்போது, மது போதையில் இருந்த அந்த நபர் அல்டிமேட் ஸ்டார் அஜித் வாழ்க என முழங்கியபடியே கதறி துடித்தார்.
இதனை அடுத்து, 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அதில் அந்த நபரை ஏற்ற முயன்ற போலீசாரை தொடவிடாமல் அந்த நபர் தல அஜித்தை பார்க்காமல், இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன், என கதறிய படியே தெரிவித்தார். ஒரு கட்டத்தில் அவரது நண்பர்கள் குண்டு கட்டாக தூக்கி ஆம்புலன்ஸில் ஏற்றி சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இதனிடையே, திரையரங்கிற்கு வெளியே இருசக்கர வாகனத்தில் அதிகம் சத்தம் எழுப்பி அட்ராசிட்டி செய்த அருண் என்ற வாலிபரை போலீசார் பிடித்து தாக்கி வாகனத்தை பறிமுதல் செய்தனர். அஜித் ரசிகர்கள் செய்த அட்ராசிட்டியால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பின்னர், அறிவிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் சிவக்குமார் ஜெயபாலன். இதையும்…
கேஜிஎஃப் கதாநாயகி யாஷ் நடித்த “கேஜிஎஃப்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே…
This website uses cookies.