ரெட்டைக்கதிரே…. 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்கள் பெற்று ஆச்சர்யப்படுத்திய இரட்டையர்கள்..!!!

Author: Babu Lakshmanan
10 May 2024, 5:18 pm

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் இரட்டையர் சகோதரிகள் ஒரே மதிப்பெண் பெற்று ஆச்சர்யப்படுத்தியள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் பகுதியை சேர்ந்த ரமேஷ்யுவராஜா (45), கலைராணி(41) என்ற தம்பதியினருக்கு அட்சயா (16),அகல்யா(16) என இரட்டை குழந்தைகள் உள்ளனர். இருவரும் ராசிபுரத்தில் உள்ள தனியார் வித்யா மந்திரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயின்று, 10ம் வகுப்பு தேர்வு எழுதினர்.

மேலும் படிக்க: பெண்களை வெளியே இழுத்து தள்ளிய வனத்துறையினர்… வனப்பகுதியில் குடியிருந்தவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியதால் பரபரப்பு!

இன்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அட்சயா, அகல்யா இரட்டையர்கள் (463/500) இருவரும் ஒரே மதிப்பெண்கள் பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தினர். ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டையர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள், சக மாணவிகள் என பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.

  • Shocking incident shared by shalini pandey உடை மாற்றும் அறையில் திடீரென நுழைந்த இயக்குனர்! அதிர்ந்துப்போன ஷாலினி பாண்டே…