வேங்கைவயல் போல தாரமங்கலத்தில் மற்றொரு சம்பவம்… நீர்தேக்கத் தொட்டியை திறந்து பார்த்த போது காத்திருந்த அதிர்ச்சி…!!

Author: Babu Lakshmanan
23 February 2024, 1:33 pm

சேலம் ; வேங்கைவயல் சம்பவத்தில் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படாத நிலையில், சேலம் மாவட்டம் தாரமஙகலத்தில் மற்றொரு சம்பவம் அரங்கேறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாரமங்கலத்தை அடுத்துள்ள துட்டம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஆட்டையான் வளவு கிராமம் உள்ளது. இந்தப் பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகிக்க ஏதுவாக, மிகப்பெரிய நீர்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்தே சுற்றுவட்டார கிராமங்களுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நேற்று வழக்கம்போல் ஆப்ரேட்டர் அம்மாசி என்பவர் நீர்த்தேக்கத் தொட்டியின் மீது ஏறி பார்த்துள்ளார். அப்போது, நீர்த்தேக்கத் தொட்டியின் உள்ளே நாய் குட்டி ஒன்று இறந்த நிலையில் மிதந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனே சுற்றுப்பகுதியிலிருந்த குடியிருப்பு மக்களிடம் தெரிவித்துள்ளார். இந்த நீர்தேக்கத் தொட்டியில் நாய் குட்டி இறந்து கிடந்ததை அறியாமல், பொதுமக்கள் அந்த நீரைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

நீர்தேக்கத் தொட்டியில் நாய்குட்டியை கொடூரமாக வீசிய சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், நீர்தேக்கத் தொட்டியைப் பார்வையிட்டு தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.தொடர்ந்து, அந்த கிராமப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

வேங்கைவயல் சம்பவத்தில் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படாத நிலையில், சேலம் மாவட்டம் தாரமஙகலத்தில் மற்றொரு சம்பவம் அரங்கேறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!