நடுரோட்டில் இளம்பெண்ணுக்கு கத்தி குத்து… கஞ்சா போதையில் இளைஞர் வெறிச்செயல்… அதிர்ச்சி சிசிடிவி காட்சி!
Author: Babu Lakshmanan4 April 2023, 9:23 pm
சேலம் அருகே இளம்பெண்ணை கஞ்சா போதையில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாநகர் லீபஜார் பகுதியில் மைதிலி என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு செல்ல தனது இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர் திடீரென அந்த பெண்ணின் இடுப்பில் கத்தியால் குத்தியுள்ளார். இதில் அதிர்ஷ்டவசமாக தப்பிய அந்த பெண், வண்டியை அப்படியே போட்டுவிட்டு மீண்டும் கடைக்குள் செல்ல முற்பட்டுள்ளார்.
இதனையடுத்து, தங்கராஜ் மீண்டும் அந்த பெண்ணை தாக்க முற்பட்டுள்ளார். அந்த பெண் கடை முன்னே வைக்கப்பட்டிருந்த பொருட்களை தூக்கி அந்த நபர் மீது வீசி உள்ளார். பின்னர், தங்கராஜ் அங்கிருந்து தப்பி ஓடவே பள்ளப்பட்டி போலீசார் நேற்று இரவு அவரை பிடித்து விசாரணைக்காக காவல் நிலையம் அனைத்து சென்று விசாரனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த மைதிலி தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.