பும்ராக்கே சவாலா..வா முடிஞ்சா மோதி பாரு…அனல் பறக்கும் AUS VS IND டெஸ்ட் மேட்ச்..!
Author: Selvan26 December 2024, 8:42 pm
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே 4 வது டெஸ்ட் போட்டி இன்று மெல்போர்னில் நடைபெற்றது.முதலில் டாஸ் வின் பண்ணி பேட்டிங்கை தேர்வு செய்தார் பேட் கம்மின்ஸ்.
பும்ராவின் பந்துக்கு சவால் விடும் சாம் கோன்ஸ்டஸ்
அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களான உஷ்மான் கவாஜா மற்றும் தன்னுடைய முதல் சர்வேதச போட்டியில் அடியெடுத்து வைக்கும் 19-வயதே ஆன சாம் கோன்ஸ்டஸ் இறங்கினார்கள்.
ஆட்டம் ஆரம்பம் முதலே தன்னுடைய அதிரடி பேட்டிங்கால்,இந்திய பவுலர்களை திணறிடித்தார் சுட்டி பையன் சாம் கோன்ஸ்டஸ்,அதிலும் பும்ரா வீசிய ஓவரில் கீப்பர் தலைக்கு மேல் சிக்ஸர் அடித்து அசத்தினார்.
கிட்டத்தட்ட 3 வருடங்கள் பிறகு டெஸ்ட் போட்டியில் பும்ரா பவுலிங்கில் சிக்ஸர் அடிக்கப்பட்டுள்ளது.இதனால் மைதானத்தில் இருந்த சக வீரர்கள் கொஞ்சம் ஆக்ரோஷமாக இருந்தனர்,இந்த சூழலில் 10வது ஓவர் முடிந்த நிலையில்,எதிர்முனைக்கு சாம் கோன்ஸ்டஸ் சென்ற போது விராட்கோலி தன்னுடைய தோள்பட்டையை வைத்து அவரை இடித்து சில வார்த்தைகளை விட்டார்.
இந்த நிகழ்வை கண்டித்து பல கிரிக்கெட் வீரர்கள் விராட்கோலி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வந்தனர்.இந்த நிலையில் அதிரடியாக ஆடி வந்த இளம் வீரர் சாம் கோன்ஸ்டஸ்,ஜடேஜா பந்து வீச்சில் 60 ரன்னுக்கு ஆட்டம் இழந்தார்.அதன்படி முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்களை இழந்து 311 ரன்கள் குவித்தது.
இதையும் படியுங்க: AUS VS IND:இளம் வீரரை சீண்டிய கோலி…மைதானத்தில் ஏற்பட்ட பரபரப்பு..வைரலாகும் வீடியோ.!
அதன்பின்பு,செய்தியார்களை சந்தித்த சாம் கான்ஸ்டாஸ் இரண்டாவது இன்னிங்சிலும் பும்ராவின் பந்துகளை அடித்து நொறுக்குவேன் என்று சவால் விட்டுள்ளார்.மேலும் என்னுடைய குறிக்கோள் பும்ராவின் திட்டங்களை தகர்த்து எறிவதுதான்,என் அணி கேப்டன் என்னை பயமின்றி விளையாட சொன்னார்.அதன்படி பும்ராவின் பந்துகளை நான் சிதறடித்தேன்.
அவர் உலகத்தரம் வாய்த்த பௌலர் தான் இருந்தாலும்,என்னுடைய பேட்டிங்கால் அவர் மீது அழுத்தத்தை போட முயற்சிப்பேன் என்று கூறியுள்ளார்.இதனால் இந்த 4வது டெஸ்ட் மேட்ச்,பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என தெரிகிறது.