ரெண்டுல ஒண்ணு பார்த்திடலாம். முன்னாள் கணவரை எதிர்க்க துணிந்த சமந்தா.. ரொம்ப கோவக்காரங்க போல.!

Author: Rajesh
17 May 2022, 1:44 pm

2010- ல் மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. பாணா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். 2017 ஆம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு முன், இருவரும் தன்னுடைய விவாகரத்தை அறிவித்தனர்.இந்த அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றி வருவார்.

தமிழில் எப்படி நயன்தாரா சோலோவாக நடித்த படங்களுக்கு பெரிய ஹீரோ படம் அளவுக்கு வரவேற்பு இருக்கிறதோ. அதே போல தெலுங்கில் சமந்தா சோலோவாக நடித்த படங்களுக்கும் வரவேற்பு இருந்துள்ளது. சமந்தாவின் “ஓ பேபி” படம் சுமார் 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அதே போல மீண்டும் சோலோ ஹீரோயினாக சமந்தா நடித்துள்ள திரைப்படம் யசோதா .

இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. அதற்கு முந்தைய நாளில் தான் நாக சைதன்யா முக்கிய வேடத்தில் நடித்துள்ள பாலிவுட் திரைப்படமான லால் சிங் சத்தா திரைப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாக உள்ளது.

தனது முன்னாள் கணவரின் பாலிவுட் முதல் திரைப்படம் அதே நேரத்தில் வருகிறது என்று சமந்தா படம் ரிலீஸ் ஆகிறதா அல்லது பாலிவுட் படம் ரிலீஸ் தேதி தள்ளிதள்ளி போய் கடைசியில் இந்த தேதி உறுதியானதா என்பது தெரியவில்லை. ஒரே நேரத்தில் சமந்தா – நாக சைதன்யா திரைப்படங்கள் வெளியாக உள்ளதால் தெலுங்கு திரையுலகமே பரபரப்பாக உள்ளது.

  • my scenes were deleted in goat movie said by black padi சண்ட போட்டு படத்துல நடிச்சேன்; ஒரு பயனும் இல்ல- வேதனையில் GOAT பட நடிகர்… அடப்பாவமே!