அடுத்த திருமணத்திற்கு தயாரான சமந்தா…? அடடே இதுவும் காதல் கல்யாணமா : மாப்பிள்ளை வேறு யாருமில்ல இவருதான்!!
Author: Udayachandran RadhaKrishnan18 September 2022, 3:36 pm
தென்னிந்திய சினிமாவில் முக்கியமான நடிகையாக வரம் வருபவர் தான் சமந்தா. மாநாடு படத்தில் எஸ். ஜே சூர்யா சொல்வது போல், சமந்தா வந்தார், நடித்தார், முதலிடத்தை பிடித்தார், முதலிடத்தில் இருக்கிறார், Repeatu. இந்த வளர்ச்சி எப்போது நடந்தது திட்டவட்டமாகத் தெரியவில்லை. எந்தப் படத்தின் மூலம் இவருக்கான அங்கீகாரம் இவ்வளவு தூரம் கிடைத்தது என்றும் தெரியவில்லை.
ஆனால் காத்துவாக்குல இரண்டு காதல் படம் ரிலீஸான பிறகு சென்னை முழுக்க கதீஜா பற்றிய பேச்சுதான். 2010- ல் மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. பாணா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.
பின் 2017 ஆம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு முன், இருவரும் தன்னுடைய விவாகரத்தை அறிவித்தனர்.
இவ்வாறுஇருக்கையில் இவர் பிரபல நடிகரான நாகசைத்தன்யாவைக் காதலித்து திருமணம் செய்தார். இருப்பினும் சில ஆண்டுகளிலேயெ இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவனை விட்டுப் பிரிந்து கெரியரில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார்.
அவர்களது பிரிவு பற்றி இன்னமும் ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறுஇருக்கையில் விவாகரத்து பின் நாகசைதன்யா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள போவதாக சில தகவல் வெளிவந்தன.
ஆனால், அதுகுறித்து அவர் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இந்நிலையில், தற்போது நடிகை சமந்தா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஃபேமிலி மேன் 2 படப்பிடிப்பின் போது சமந்தாவிற்கு இந்த காதல் மலர்ந்ததாகவும், அவருடைய காதலர் பிடவுனை சேர்ந்த ஒருவர் என்றும் சொல்லப்படுகின்றது.