எதுவும் இல்லாத சமந்தாவை பார்த்த பிரபலம்.. பூட்டி வைத்த ரகசியம் குறித்து வெளியான தகவல்.!

Author: Rajesh
8 May 2022, 4:42 pm

நாக சைதன்யா, சமந்தா இருவரும் குடும்பத்தின் சம்மதத்துடன் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் கடந்த ஆண்டு இவர்களது விவாகரத்து செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவர்களின் பிரிவுக்கு என்ன காரணம் என இருவரும் தெரிவிக்காத நிலையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது.

திருமணத்திற்குப் பிறகு படங்களில் மிகவும் கவர்ச்சியாக நடிப்பதினால் தான் இவர்களுக்குள் விவாகரத்து ஆனது என்ற செய்தியும் கூறப்படுகிறது. அதேபோல் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் சமந்தா ஆடியிருந்தார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

ஆனால் தற்போது சமந்தா நாகசைதன்யாவை பற்றி சில விஷயங்களை கூறியிருக்கிறாராம். அதாவது என் வாழ்க்கையில் வந்த எல்லோரும் சமந்தா ஒரு வெற்றிகரமான நடிகை என்பதை மட்டுமே பார்த்தார்கள். ஆனால் நாகசைதன்யா மட்டும்தான் இது எதுவும் இல்லாத சமந்தாவை பார்த்தார்.

இதனால் நாக சைதன்யா எனக்கு எப்போதுமே ஸ்பெஷல் தான். அவர் என்னுடைய பெஸ்ட் ஃபிரண்டாக இருந்திருக்கிறார். அந்த நட்பு எப்போதும் முடிவுக்கு வராது என சமந்தா கூறியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது வரை நாகசைதன்யா மீது இவ்வளவு அன்பு வைத்திருக்கும் சமந்தா விவாகரத்திற்கு சம்மதித்தது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது ஒரு பக்கமிருக்க நாக சைதன்யாவுக்கு இரண்டாம் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வருவதாகவும் இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

  • Udit Narayan viral kiss video ரசிகைக்கு LIVE முத்தம்…மேடையில் பிரபல பாடகரின் லீலை…வைரலாகும் வீடியோ..!