வெட்டியா பேசறத விட்டுட்டு உருப்படியா எதையாவது செய்யுங்க : உடையை விமர்சித்தவர்களை டார் டாராக கிழித்த சமந்தா!!
Author: Udayachandran RadhaKrishnan14 March 2022, 5:45 pm
சமீபத்தல் நடிகை சமந்தா அணிந்து வந்த ஆடை குறித்து இணையத்தில் கடும் விமர்சனம் எழுந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
திரைத்துறையில் இருக்குமம் பெண்களையும், விவாகரத்து பெற்று கொள்ளும் நடிகைகளையும் கொச்சையான மொழியில் விமர்சிப்பதை ஒரு கும்பல் தொழிலாக வைத்துள்ளது.
இவர்களுக்கு சம்மந்தப்பட்ட நடிகைகள் பதிலடி கொடுத்து வந்தாலும் திருந்துவதாக இல்லை. விவாகரத்துக்கு பிறகும் குறிப்பிட்ட அந்த நடிகரையோ நடிகைகயோ அந்த கும்பல் விடாமல் துரத்தி விமர்சம் செய்து வருகிறது.
விவாகரத்துக்கு பின் சமந்தா முன்படை விட மாடர்ன் உடைகளை அதிகமாக அணிந்து வருகிறார். இதை பலரும் விமர்சித்து வரகின்றனர். இந்த நிலையில் சமந்தா சில தினங்களுக்கு மன்பு விருது வழங்கும் விழாவில் பங்கேற்றார்.
அப்போது மேற்கத்திய பெணக்ளை போன்ற ஸ்லீவ்லெஸ் உடையில் தோன்றியிருந்தார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பலரும் கொச்சையான மொழியில் விமர்சித்தனர். இதற்கு தற்போது சமந்தா பதிலடி கொடுத்துள்ளார்.
நாம் 2022ல் இருக்கிறோம், பெண்கள் அணியும் ஆடையை வைத்து அவர்களை மட்டமாக எடை போடுவதை முதலில் நிறுத்திக்கொள்ளுங்கள், அவர்களை விமர்சிப்பதை விட்டுவிட்டு நம்மை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும என கூறியுள்ளார்.