காருக்குள் இளம்பெண்ணுடன் கசமுசா? போலீசிடம் சிக்கிய சமந்தாவின் மாஜி கணவர்…!!

Author: Udayachandran RadhaKrishnan
14 August 2022, 6:08 pm

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யா சினிமாவில் தவிர்க்க முடியாதா கதாநாயகனாக ஜொலித்து வருகிறார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் இவர், நடிகை சமந்தாவை கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து 4 ஆண்டுகளில விவாகரத்து செய்தார்.

சமந்தா உடனான பிரிவுக்கு பின்னர் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நாக சைதன்யா, சமீபத்தில் வெளியான லால் சிங் சத்தா படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

இப்படத்தில் நடிகர் அமீர்கானுக்கு நண்பனாகவும், இராணுவ வீரராகவும் நடித்திருந்தார். இது பாரஸ்ட் கோம்ப் என்கிற ஆங்கில படத்தின் ரீமேக் ஆகும்.

இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்துகொண்ட நாக சைதன்யாவிடம் தொகுப்பாளர் எப்போதாவது போலீசிடம் தப்பு பண்ணி மாட்டி உள்ளீர்களா என கேள்வியை கேட்டார்.

இதற்கு பதிலளித்த நாகசைதன்யா, தான் ஒருமுறை காரில் பெண்ணுடன் நெருக்கமாக இருந்தபோது வசமாக சிக்கியதாக கூறினார். மேலும் இந்த சம்பவம் ஐதராபாத்தில் நடந்ததாகவும் கூறினார்.

சிக்கியபோது பயமாக இருந்ததா என தொகுப்பாளர் கேட்க, சிக்கியபோது பயமாக இல்லை என கூறிய நாக சைதன்யா, சொல்றதுக்கு ஒரு கதையாவது ஆச்சேனு நினைச்சேன் என்று சொன்னார்.

அந்த காருக்குள் நான் என்ன செஞ்சேன்கிறது எனக்கு மட்டுமே தெரியும் என சிரித்தபடி கூறி உள்ளார் நாக சைதன்யா. இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் ஒருவேளை சமந்தாவுடன் காதல் வயப்பட்ட போது நடந்ததா அல்லது இந்த பெண் யாராக இருக்கும் என பல்வேறு கோணங்களில் அவருக்கு ட்ரோல் செய்து வருகின்றனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 920

    4

    9