7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!
Author: Udayachandran RadhaKrishnan21 April 2025, 6:59 pm
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மீண்டும் தொழிற்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக இன்று சுங்குவார்சத்திரம் பகுதியில், சாம்சங் இந்திய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
இதையும் படியுங்க: ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!
சங்கத்துடன் சாம்சங் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தொழிலாளர் கமிட்டியுடன் போட்ட ஒப்பந்தத்தை கையறுத்திடுமாறு தொழிலாளர்களை கட்டாயப்படுத்த கூடாது. சங்க நிர்வாகிகள் 23 பேர் எதிராக போடப்பட்ட நடவடிக்கைகளை கைவிட வேண்டும். பெரும்பான்மை தொழிற்சங்கத்தை தேர்வு செய்ய ரகசிய வாக்கு எடுப்பு நடத்த வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஏராளமான சாம்சங் ஊழியர்கள் கலந்து கொண்டு samsung நிறுவனத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார். ஏற்கனவே மாதக்கணக்கில் சாம்சங் ஊழியர்கள் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், மீண்டும் போராட்டத்தில் இறங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.