சனாதனத்தை வேரோடு அழிக்க வேண்டும்.. அமைச்சர் உதயநிதிக்கு ஆதரவாக களமிறங்கிய திமுக எம்பி பரபரப்பு பேச்சு!!!

Author: Udayachandran RadhaKrishnan
7 September 2023, 10:00 pm

சனாதனத்தை வேரோடு அழிக்க வேண்டும்.. அமைச்சர் உதயநிதிக்கு ஆதரவாக களமிறங்கிய திமுக எம்பி பரபரப்பு பேச்சு!!!

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட சிந்தல்பாடி அரசு பள்ளியில் குரு வட்ட அளவிலான அரசு மற்றும் தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு தடகளப்போட்டி நடைபெற்றன.

இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் கலந்துகொண்டு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவிற்கு கடந்த 9 ஆண்டு காலம் இல்லாத பாரத் என்கிற இந்த பெயர் மாற்றத்திற்கான காரணம் பாஜகவிற்கு எதிராக நாட்டில் உள்ள அனைத்து எதிர்கட்சிகளின் இந்தியா என்ற கூட்டணியை கண்டு பயந்து கொண்டு தான் மாற்றப் பார்க்கின்றனர் எனவும், உதயநிதி ஸ்டாலின் தலையை கொண்டு வருபவர்களுக்கு 10 கோடி என அறிவித்த சாமியார் அதற்கு மேலும் கூடுதலாக தொகையை அறிவித்திருக்கலாம்.

அவர்கள் விளம்பரம் தேடுவதற்காக இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற பல நிகழ்வுகளை திமுக சந்தித்து இருக்கிறது.

நாங்கள் விளம்பரத்திற்காக செய்யவில்லை எங்களுடைய கொள்கை, கோட்பாடு சித்தாந்தத்தை தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், அறிஞர் அண்ணா கலைஞர், தற்போதுள்ள முதல்வர் என எங்களுடைய கொள்கைகளை மட்டும் தான் பேசி வருவதாகவும், இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் என்ற ஒரு தலைவரை உண்டாக்கியுள்ளதாகவும், சனாதனத்தை எதிர்த்து நீண்ட காலமாக பேசி வரும் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் சனாதனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிக்கொண்டு வருபவர்.

இதற்கு பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார், உதயநிதி ஸ்டாலின் பேசியது தேசிய அளவில் ஒரு பேசும் பொருளாகவும் விவாத பொருளாகவும் உள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பல விஷயங்களில் புரிதல் கிடையாது. அதனால் தான் உளறிக்கொண்டு வருகிறார். உடன்கட்டை ஏறுதல், குழந்தை திருமணம் உள்ளிட்ட இது போன்ற சனாதனத்தை கொஞ்சம் கொஞ்சமாக உடைத்து வருவதுதான் சனாதனம், தமிழக அரசின் சின்னத்தில் இருக்கக்கூடிய கோபுரத்தை அனைவருக்குமான சமத்துவமாகதான் நாம் பார்க்கிறோம்.

இந்து கோவில் தமிழக அரசின் சின்னத்தில் உள்ளதை திமுக அரசு என்றைக்கும் மாற்றுவதாக இதுவரைக்கும் தெரிவித்ததில்லை.

இந்துவுக்கு எதிராக உள்ளவர்கள் என கட்டமைப்பை உருவாக்க பாஜகவினர் பார்க்கின்றனர். சனாதனம் வேரோடு அழிக்கக்கூடிய ஒரு விஷயம் இதில் எந்தவித மாற்றமும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் தெரிவித்தார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 355

    0

    0