சனாதனம் குறித்த எதிர்ப்பு பேச்சு.. இனி தமிழக தேர்தல்களிலும் தாக்கம் இருக்கும் : ஜிகே வாசன் ஆரூடம்!

Author: Udayachandran RadhaKrishnan
3 December 2023, 4:38 pm

சனாதனம் குறித்த எதிர்ப்பு பேச்சு.. இனி தமிழக தேர்தல்களிலும் தாக்கம் இருக்கும் : ஜிகே வாசன் ஆரூடம்!

விழுப்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விழுப்புரம் மண்டல அளவிலான மாநில நிர்வாகிகள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஜி கே வாசன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் தலைவர் ஜி கே வாசன், சென்னை டெல்டா மாவட்டங்களில் மழை அதிகமாக பெய்து வருவதால் தமிழகத்தின் ஆட்சியாளர்கள் அனைத்து பகுதிகளிலும் பாதித்த இடங்களில் உணவு வழங்க வேண்டும் ,தொடர் மழையின் காரணமாக சாலைகள் மோசமாகியுள்ளதால் அதனை சீர் செய்ய வேண்டும் என்றும் சுகாதாரத்தினை பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

அதனை தொடர்ந்து பேசிய அவர் ஆட்சியாளருக்கும் ஆளுநருக்கும் தனிப்பட்ட கருத்து வேறுபாடு காழ்புணர்ச்சி இருக்க கூடாது ஆட்சியாளர் ஆளுநர்கள் சட்டப்படி இணைந்து செயல்பட வேண்டும் மாநிலத்தின் வளர்ச்சியை தங்கு தடையின்றி செயல்படுத்த வேண்டும் என்பது மக்களின் எண்ணமாக உள்ளதாகவும் என்னுடைய மாநிலம் அதன் நலம் என்று இருவரின் ஆட்சியாக இருக்க வேண்டும் இருவரின் கருத்து வேறுபாட்டாக இருக்க கூடாது தெரிவித்தார்.

அமலாக்க துறையில் அதிகாரி தவறு செய்திருந்தால் அவர் தண்டிக்கப்பட வேண்டும் மக்களுக்காக மத்தியில் மாநிலத்தில் பணி செய்பவர்கள் நேர்மையாக செயல்பட வேண்டும் அவர்கள் தவறான செயல்பாடுகளில் ஈடுபட கூடாது என்றும் நாடாளுமன்றத்தில் 19 மசோதாக்கள் தாக்கல் செய்கின்ற நிலையில் எதிர்கட்சிகள் தனது பணியை சரியாக செய்ய வேண்டும் வலியுறுத்தினார்.

இரண்டு மாநிலங்களில் பாஜக மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது இந்த வெற்றியில் மத்திய அரசின் பிரதிபலிப்பு இருக்கிறது. மத்தியில் பாஜகதான் மிகப்பெரிய கட்சியாகவும், தமிழகத்தில் அதிமுக தான் மிகப்பெரிய கட்சியாக இருப்பதாகவும் வட இந்தியாவில் ஆளும் கட்சிகள் தோல்வியை தழுவியுள்ளது.

இதற்கு குடும்ப அரசியல், ஊழல் அடிப்படையில் தோல்வியை சந்தித்துள்ளதாகவும் தெரிவித்தார். தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் கூட்டணி சூழலை பொறுத்து அறிவிக்கப்படும் என்றும் சனாதனத்தை ஒழித்து விடவும் முடியாது அழிக்கவும் முடியாது அதனை யாவரும் ஏற்றுக்கொள்ளலாம், சனாதனத்தை தவறாக பேசும் போது எங்கெங்கே அதன் தாக்கம் இருக்கிறதோ அங்கங்கே அதன் தாக்கம் தேர்தல் முடிவுகளிலும் முடிவுகளில் தெரிவதாக தெரிவித்தார்.

சென்னையில் பலகோடி ரூபாய் செலவு செய்து மழை நீர் வடிகால் பணிகள் நடைபெற்றும் மக்களுக்கு தீர்வு கிட்டவில்லை டாஸ்மாக் வேதனையிலும் சாதனை செய்து தமிழகம் படைத்து கொண்டிருப்பதாக ஜி கே வாசன் கூறினார்.

  • veera dheera sooran director told that smoking and drinking scenes are not in his films மயிருங்குறது கெட்ட வார்த்தையா? என் படத்துல அந்த விஷயமே இல்லை- விக்ரம் பட இயக்குனர் பரபரப்பு பேட்டி…