முடிஞ்சா Arrest பண்ணு.. நிர்வாண கோலத்தில் நின்று சவால் விடுத்த திமுக பிரமுகர்; 4 மணி நேரம் தவித்த அதிகாரிகள்..!

Author: Vignesh
31 August 2024, 10:29 am

நெல்லை நாங்குநேரி விஜய நாராயணம் அருகே உள்ள வெங்கட்ராயபுரம் குளத்தில் மர்ம நபர்கள் மணல் திருடுவதாக கடந்த 17ஆம் தேதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு, விரைந்து சென்ற போலீசார் பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் அள்ளிக்கொண்டிருந்த நபர்களை பிடிக்க முயன்றனர். உடனே அவர்கள் பொக்லைன் இயந்திரம், பைக் ஆகியவற்றை அப்படியே விட்டுவிட்டு தப்பி சென்று விட்டனர்.

இது தொடர்பாக, விஜயநகரம் போலீசார் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த திமுக பிரமுகர் கங்கை ஆதித்தன் உட்பட சிலரை தேடி வந்தனர். இந்நிலையில், கங்கை ஆதித்தன் அவரது வீட்டில் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, விஜய நாராயணன் இன்ஸ்பெக்டர் நாககுமாரி தலைமையில் போலீசார் அவரது வீட்டிற்கு சென்றனர்.

Sand Theft

போலீசார் கதவை தட்டிய போது கங்கை ஆதித்தனின் மனைவி கதவை திறந்தார். போலீசாரை வீட்டுக்குள் அனுமதிக்காமல் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் வாக்குவாதம் செய்தனர். சுற்றி வளைத்ததை அறிந்த கங்கை ஆதித்தன் அறைக்குள் உள்பக்கமாக பூட்டிக் கொண்டு பதுங்கினார். இதனால், மணல் கொள்ளையனை கைது செய்ய முடியாமல் நாலு மணி நேரமாக போலீசார் திணறினார்கள்.

முன்னதாக, கங்கை ஆதித்தனை கைது செய்ய கதவை போலீசார் உடைத்தனர். அப்போது கங்கை ஆதித்தன் தான் நிர்வாணமாக நின்றால் போலீசார் கூச்சப்பட்டு வரமாட்டார்கள். அதனால், தப்பிவிடலாம் என எண்ணி ஆடைகளை களைந்து நிர்வாணமாக நின்றதாக கூறப்படுகிறது. ஆனாலும், போலீசார் பின்வாங்காமல் கங்கை ஆதித்தனை குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர். பின்னர் போர்வையை போத்தி அவரை அழைத்து சென்றனர். போலீஸ் வாகனத்தில் அவரை அழைத்துச் சென்றனர்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 214

    0

    0