மண் திருட்டுக்கு பின்னணியில் திமுக பிரமுகர்கள்?… தினமும் 100க்கும் மேற்பட்ட லாரிகளில் சவுடுமண் திருட்டு.. திகைக்கும் மக்கள்..!!!
Author: Babu Lakshmanan23 February 2024, 2:56 pm
அரசு நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் திமுக முக்கிய பிரமுகர்களின் பெயரில் மண் திருட்டு அரங்கேறி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், நெரூர் என்.புதுப்பாளையம் பகுதியில் காவிரி ஆற்றங்கரையோரத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அரசு நிலத்தில் சுமார் 3 மாத காலமாக சவுடுமண் திருட்டு அரங்கேறி வருகின்றது.
நாள் ஒன்றுக்கு 150 முதல் 200 லாரிகள் வரை நடைபெறும் மண் திருட்டு நடைபெற்று வருகின்றது. இந்த மண் திருட்டு குறித்து அரசு அதிகாரிகள் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் மட்டுமில்லாது, சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளிடத்தும் புகார் தெரிவித்தும், எந்தவித பயனுமில்லை.
எனவே, இந்த சம்பவம் குறித்தும் இந்த மண் கடத்தல் குறித்தும், மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திமுக பிரமுகர்களின் பெயரில் நடைபெறும் இந்த மண் திருட்டு சம்பவத்தினை அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கனிம வளக்கொள்ளையை கட்டுப்படுத்த முடியும் என்றும், ஆகவே துரித நடவடிக்கை எடுத்து கனிமவளத்தினை காக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்