மோகன் ஜுனேஜா நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக பல ஆண்டுகளாக 100க்கும் மேற்பட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். அகில இந்திய அளவில் பிளாக்பஸ்டர் சூப்பர்ஹிட் படமான கேஜிஎப் 2 மற்றும் கேஜிஎப் 1 ஆகிய இரு பாகங்களிலும் அவர் நடித்துள்ளார்.
செல்லடா என்ற கன்னட படத்தில் மோகனின் கதாபாத்திரம் நடிகர் கணேஷின் திரை வாழ்க்கையில் ஒரு பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது, அந்த பாத்திரம் இன்னும் ரசிகர்களால் நினைவுக்கூறப்படுகிறது. மேலும் மோகன் பல சீரியல்களிலும் நடித்துள்ளார். மோகனின் மரணம் ரசிகர்கள் மற்றும் கன்னட திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ரசிகர்கள் சமூக ஊடக பக்கங்களில் மோகனுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மிக முக்கியமாக கேஜிஎஃப் படத்தில் வரும் ராக்கி பாய் பில்டப் காட்சியில் ‘கேங்க கூட்டிட்டு வர்ரவன் கேங்ஸ்டர், ஒத்தைய வர்ரவன் மான்ஸ்டர்’ என அவர் பேசும் வசனம் பெரும் புகழை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.