தெருவெல்லாம் வீசிய சந்தன வாசம் : அதிரடி சோதனை நடத்திய போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
1 December 2022, 2:34 pm

சோழவரம் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 500 கிலோ எடை கொண்ட செம்மரக்கட்டை பறிமுதல் இருவர் கைது

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் காவல் எல்லைக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில் வீட்டில் செம்மரக்கட்டை பதுக்கி வைத்திருப்பதாக சோழவரம் காவல் ஆய்வாளர் ஜெகன்நாதனுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து காந்திநகர் பகுதியில் உள்ள சோலை அம்மன் நகரில் வீடு ஒன்றில் சோதனை செய்தபோது அங்கு 500 கிலோ எடை கொண்ட செம்மரக்கட்டை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த சோழவரம் போலீசார் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்த இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் காந்திநகர் பகுதியை சேர்ந்த அசோக் (வயது 50) மற்றும் அம்பேத்கர் நகரை சேர்ந்த அருண்குமார் (வயது 28) என விசாரணையில் தெரிய வந்தது.

பின்னர் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த சோழவரம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ