இமயம் சாய்ந்து விட்டது.. விஜயகாந்தின் கண்ணீர் அஞ்சலி பதாகையை கட்டித்தழுவி கதறி அழும் பெண் துப்புரவுப் பணியாளர்!!

Author: Babu Lakshmanan
28 December 2023, 12:48 pm

கள்ளக்குறிச்சியில் வைக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்ணீர் அஞ்சலி பதாகை கட்டித்தழுவி பெண் துப்புரவுப் பணியாளர் ஒருவர் கதறி அழும் காட்சி பார்ப்போரின் நெஞ்சை உலுக்கியுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி, கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்தை பார்த்து, பதறிப்போன பெண் துப்புரவுப் பணியாளர் ஒருவர், அதனை கட்டித்தழுவி, கண்கலங்கி கதறி அழுத காட்சி, காண்போரையும் கண் கலங்க செய்தது.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஏமப்பேர் கிராமத்தைச் சேர்ந்தவர் அலமேலு. இவர், கள்ளக்குறிச்சி நகராட்சியில் துப்புரவுப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், சாலையை தூய்மைப்படுத்துவதற்காக வந்தபோது, அங்கு இமயம் சாய்ந்து விட்டது என்ற விஜயகாந்தின் கண்ணீர் அஞ்சலி பதாகை வைக்கப்பட்டிருந்தது.

அதனைப் பார்த்ததும் பதறிப்போய் அதனை கட்டித்தழுவி கண்கலங்கி கதறி அழுத காட்சி, காண்போரை கண்கலங்க செய்ததுடன் கல்மனமும் கரையச் செய்தது குறிப்பிடத்தக்கது.

  • Vijay Trisha Sangeetha விஜய் வீட்டில் வெடித்த திரிஷா விவகாரம்.. சங்கீதா பாவம் : பரபரப்பை கிளப்பிய பிரபலம்!
  • Views: - 989

    0

    0