வீடுகளில் சேகரிக்கும் குப்பையை சாலையோரம் வீசும் தூய்மை பணியாளர் : அதிர்ச்சி VIDEO!!

Author: Udayachandran RadhaKrishnan
2 May 2024, 9:38 pm

வீடுகளில் சேகரிக்கும் குப்பையை சாலையோரம் வீசும் தூய்மை பணியாளர் : அதிர்ச்சி VIDEO!!

கோவை, வடவள்ளி பகுதிகளில் வீடுகளில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை அப்பகுதி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் அதனை சேகரித்து லாரிகள் மூலம் எடுத்துக் கொண்டு குப்பை கிடங்கு கொண்டு சென்று கொட்டுவது வழக்கம். மேலும் சாலை ஓரங்களில் குப்பைகளை வீசி செல்லும் பொதுமக்கள் இடம் மாநகராட்சி ஊழியர்கள் அபராதமும் வசூலித்து வருகின்றனர்.

பொது மக்களிடம் இது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாநகராட்சி அதிகாரிகள் ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வீடுகளில் சேகரித்த குப்பையை வடவள்ளி சின்மயா நகர் பகுதியில் உள்ள சாலை ஓரத்தில் மாநகராட்சி ஊழியர் வீசி செல்லும் செல்போன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கும் மாநகராட்சி இதுபோன்ற செயலில் ஈடுபடும் மாநகராட்சி தூய்மை பணியாளர் மீது எவ்வாறு நடவடிக்கை எடுப்பார்கள் என்று கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி