சொன்னீங்களே.. செய்தீர்களா? கோவை அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
9 February 2023, 11:19 am

கோவையில் ஊதிய உயர்வை அமல்படுத்த கோரி அரசு மருத்துவமனை ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமார் 300 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் நாள் ஒன்றுக்கு ₹412 ஊதியமாக பெற்று வருகின்றனர். விரைவில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ஒரு நாள் ஊதியம் ₹721 ஆக வழங்க கடந்த ஆண்டுகள் கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த சமீரன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று வரை அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு அந்த ஊதிய உயர்வை வழங்காததால் அரசு மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுமார் 80க்கும் மேற்பட்டவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்னரே இருந்து விடுத்து வரும் நிலையில் அது செவி சாய்க்கப்படாத நிலையில் தங்களுக்கு ஊதிய உயர்வையாவது உடனடியாக அமல்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அரசு மருத்துவமனையில் துப்புரவு பணிகள் தொய்வு அடைந்துள்ளன.

போராட்டக்காரர்களுடன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் நிர்மலா நடத்திய பேச்சு வார்த்தையும் தோல்வியடைந்தது. இதனை அடுத்து ஒப்பந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் காவல் துறையினரும் போராட்ட குழுவினருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது.

இந்த நிலையில் தாசில்தார் முன்னிலையில் எழுத்துப்பூர்வமாக தங்களுக்கு உத்தரவாதம் அளித்தால் மட்டுமே இந்த காத்திருப்பு போராட்டத்தை கைவிடுவோம் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளன.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 480

    0

    0