கோவையில் 3வது நாளாக தொடரும் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம் : ஆணையர் அலுவலகத்தில் தொடங்கியது பேச்சுவார்த்தை!!

Author: Udayachandran RadhaKrishnan
4 October 2022, 11:15 am

கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களின் தொடரும் மூன்றாவது நாள் போராட்டம்

கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அறிவித்த ரூ.721/- தினசரி ஊதியமாக வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் காப்பீடு பி.எப் இ.எஸ் ஜ முறைபடுத்த வேண்டும் எனவும் 15ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டும், தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

முதல் நாள் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலை இடம் மனு அளித்து போராட்டத்தை தொடங்கினர். நேற்று இரண்டாவது நாளாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பாக போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் தூய்மை பணியாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தின் அவசர பேச்சுவார்த்தை இன்று காலை மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் கோவை மாநகராட்சி மேயர் தலைமையில் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் சில தொழிற்சங்கம் போராட்டத்தில் கலந்து கொள்ளாதவர்கள் பேச்சுவார்த்தைக்கு வந்ததால் வெளிநடப்பு செய்தனர். பின்னர் போராட்டத்தில் கலந்து கொள்ளாத தொழில் சங்கத்தினர் வெளியே அனுப்பிய பிறகு அதன் பின்னர் பேச்சுவார்த்தை தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!