காவல்நிலையத்தில் கேட்ட திடீர் வெடிசத்தம்… மேற்கூரை சிதறிய ஒருவர் பலி ; சங்ககிரியில் அதிர்ச்சி சம்பவம்…!!
Author: Babu Lakshmanan28 December 2023, 10:15 am
சேலம் – சங்ககிரி காவல் நிலையத்தில் திடீரென பட்டாசு வெடித்ததில் மியாமத்துல்லா என்பவர் உயிரிழந்ததோடு, புகார் கொடுக்க வந்த பவானியைச் சேர்ந்த பரத் என்பவர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம் மாவட்டம் சங்ககிரி சரக காவல்நிலையத்தில் நாளை சங்ககிரி உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் அவர்களின் ஆய்வு நடப்பதையொட்டி, காவல்நிலையம் முழுவதும் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு காவல் நிலையம் வலது பக்கத்தில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் எரிந்து கொண்டிருந்தபோது, திடீரென மர்மப் பொருள் வெடித்ததில் காவல்நிலையம் மேற்கூரை தகரம் கிழிந்தது விழுந்தது.
அப்போது, காவல் நிலையம் அருகில் சுத்தம் செய்து கொண்டிருந்த சங்ககிரியைச் சேர்ந்த நியமத்துல்லா என்பவரின் வயிற்றில் காவல் நிலையத்தின் மேற்கூரை தகரம் கிழித்ததில் பலத்த காயம் அடைந்து சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், காவல் நிலையத்தில் சாலை விபத்து வழக்கு சம்பந்தமாக வந்த பவனியைச் சேர்ந்த பரத் என்பவருக்கு வலது பக்க தொடையில் காயம் ஏற்பட்டு சங்ககிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் தொடர்பாக சங்ககிரி காவல் ஆய்வாளர் தேவி சங்ககிரி உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜா ஆகியோர் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் தகவலறிந்து விரைந்து வந்த சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் கபிலன் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார். இதனால் சங்ககிரி காவல் நிலைய வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.