நான் சொல்றத செஞ்சு காட்டுங்க..இந்திய அணிக்கு சவால்..முன்னாள் பாகிஸ்.வீரர் சர்ச்சை பேச்சு.!
Author: Selvan2 March 2025, 7:00 pm
இந்திய அணியை வம்பிழுக்கும் சக்லைன் முஸ்தாக்
தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது,இதில் ஒரு போட்டியில் கூட ஜெயிக்காமல் பாகிஸ்தான் படு மோசமாக தொடரை விட்டு வெளியேறியுள்ளது.
இதையும் படியுங்க: அடேங்கப்பா…’குட் பேட் அக்லி’ டீசரில் அஜித் போட்டிருந்த சட்டை இவ்ளோ காஸ்ட்லீயா.!
இதனால் முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் பலர் பாகிஸ்தான் வீரர்களை சரமாரியாக விவாதித்து வருகின்றனர்,இந்த நிலையில் முன்னாள் வீரர் சக்லைன் முஸ்தாக் இந்திய அணியை சீண்டியுள்ளார்.
சமீபத்தில் அவர் கூறியது,அரசியலை நகர்த்தி வைத்து நாம் பார்த்தோம் என்றால் இந்திய அணி நன்றாகவே விளையாடுகிறாரகள்,ஆனால் பாகிஸ்தான் அணியின் முழு பலத்தை தெரிந்து கொள்ளவேண்டும் என்றால்,எங்களுடன் அவர்கள் அடிக்கடி விளையாட வேண்டும்,கிட்டத்தட்ட 10 டெஸ்ட்,10 ஒரு நாள் போட்டி,10 T-20 போட்டிகளில் அவர்கள் விளையாட ரெடியா ,அப்படி விளையாடினார்கள் என்றால் எங்கள் அணி யார் என்பது உலகத்துக்கே தெரிய வரும் என்று சக்லைன் முஸ்தாக் தெரிவித்துள்ளார்.
இவருடைய பேச்சு முட்டாள்தனமாக உள்ளது என ரசிகர்கள் பலர் சோசியல் மீடியாவில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.