நானும் அப்போ உச்ச நடிகர் தான்.. வம்பிழுத்து பார்க்கும் சரத்குமார்!

Author: Hariharasudhan
15 November 2024, 7:44 pm

நான் அரசியலுக்கு வந்தபோது நானும் உச்ச நடிகராக தான் இருந்தேன் என நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமார் கூறியுள்ளார்.

சென்னை: சென்னையில் இன்று (நவ.15) நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “1996ஆம் ஆண்டு தமிழகத்தில், இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியை எதிர்த்து, தனிமனிதனாக நான் அரசியலுக்கு வந்தேன். அன்றைக்கு என்னைப் போன்று யாருக்கும் அந்த தைரியமும், திராணியும் கிடையாது.

அந்த நேரத்தில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கூறுவது போல நானும் உச்ச நடிகர்தான். மிகப்பெரிய ரசிகர்கள் எனக்கு இருந்தனர். அதிகமான ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து ஒரு படத்தைப் பார்ப்பது என்றால், அது என்னுடைய படத்தை மட்டும்தான். அந்த நேரத்தில் தான் நானும் அரசியலுக்கு வந்தேன்.

அதிகமான ரசிகர்கள் இருந்த நேரத்திலும், பெரிய பெரிய வெற்றிப் படங்களைக் கொடுத்த போதிலும் நான் அரசியலுக்கு வந்தேன். அதற்கு காரணம் மக்கள் சேவை மட்டுமே. ஜெயலலிதாவை யாரும் எதிர்க்கவே முடியாது என்று அப்போது கூறினார்கள், என் வீட்டில் கல்லெறிந்து தாக்குதல் நடத்தினார்கள், மலத்தைக் கழித்து ஊற்றினார்கள், ஆனாலும், நான் 40 நாட்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்தேன்.

அதேபோல், நான் தனியாக அரசியல் கட்சி தொடங்கிய போது, இரு மாபெரும் தலைவர்களை எதிர்த்து அரசியல் செய்தோம் (அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி). எனவே, என்னைப் பொருத்தவரையில், எதுவும் சாத்தியம், உழைப்பும் உறுதியும் இருந்தால் மட்டும். உலக அளவில் இந்தியாவுக்கு இன்றைக்கு மிகப்பெரிய புகழ் கிடைத்திருக்கிறது என்றால், அதற்கு காரணம் பிரதமர் நரேந்திர மோடி.

Sarathkumar party inaugurate

சர்வதேச அவில் இந்தியர்களின் பெருமை உயர்ந்துவிட்டது. முந்தைய ஆட்சிக்கும், பாஜக ஆட்சிக்கு வந்தபிறகும், தமிழக மீனவர்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். பாதிப்புகள் குறைந்துகொண்டே தான் வருகிறது. இலங்கை அரசுக்கு மிகப்பெரிய உதவியாக இருந்ததால் தான் பொருளாதார ரீதியாக அந்த நாடு வலுவான நிலையில் இருக்கிறது,” எனக் கூறினார்.

இதையும் படிங்க: காதலிப்பவர்கள் கட்டிப்பிடிப்பது குற்றமல்ல.. கோர்ட் அதிரடி கருத்து!

முன்னதாக, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பேசிய அதன் தலைவரும், நடிகருமான விஜய், என்னுடைய கேரியரில் உச்சத்தில் உள்ளபோது அரசியலுக்கு வந்துள்ளேன் எனக் கூறியிருந்தார். மேலும், சரத்குமார், இந்த நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் தனது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு, பாஜகவோடு இணைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!