‘நான் நடிக்கிறதாலதான் கெட்டுப் போகிறார்களா?’ – ரம்மி விளம்பர சர்ச்சைக்கு சரத்குமார் ஆவேச பதில்..!

Author: Vignesh
26 September 2022, 6:15 pm

ரம்மி விளையாட்டு விளம்பரத்தில் நடித்ததற்கு எழுந்த சர்ச்சைக்கு சரத்குமார் கொடுத்து இருக்கும் பதில் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீபகாலமாக ஆன்லைன் ரம்மி ஏற்படுத்தி விளையாட்டு பலருடைய வாழ்க்கையை சூறையாடிக் கொண்டு வருகின்றது. இந்த விளையாட்டின் மூலம் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்திருக்கின்றனர்.

இதனால் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறது. ஆனால், இந்த விளம்பரங்களில் பிரபல நடிகர்கள் தான் நடித்து மக்கள் மத்தியில் வைரல் ஆக்கி வருகிறார்கள். இது குறித்து சோசியல் மீடியாவிலும் பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் ரம்மி சர்கிள் விளையாட்டு குறித்து ஆதரவாக நடிகர் சரத்குமார் அளித்திருக்கும் பேட்டி சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை கிளப்பி வருகிறது.

சமீபத்தில் அளித்த பேட்டியில் சரத்குமார் கூறியது, சரத்குமாரால் தான் இந்த நிறைய பேர் கெட்டுப் போகிறார்கள் என்றெல்லாம் சோசியல் மீடியாவில் கருத்துக்கள் வந்திருந்தது.

எல்லோரும் லட்சக்கணக்கில் கிரெடிட் கார்டை வைத்துக் கொண்டுதான் விளையாடுகிறீர்களா? இல்லை எல்லோரும் நான் விளம்பரத்தில் நடித்ததினால் தான் வீடு வாசலை இழக்கிறீர்களா? நான் சொல்றதுக்காக தான் விளையாடுகிறீர்கள் என்று சொன்னால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. கெட்டுப் போகிறவன் என்று நினைத்தால் அவன் எப்படி இருந்தாலும் கெட்டுதான் போவான். விடுமுறை நாட்களில் மரத்தடியில் ஆங்காங்கே சீட்டுக்கட்டுகளை வைத்துக்கொண்டு விளையாடிகிறார்கள். அங்கேயும் சூதாட்டம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது எல்லாம் நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

தடை செய்ய வேண்டும் என்றால் ஒரு கடுமையான சட்டத்தை கொண்டு வர வேண்டும். அந்த சட்டத்தை அமல்படுத்தி அதற்கு பிறகும் நான் தான் காரணம் என்று சொன்னால் ஏற்று கொள்கிறேன். நீங்கள் என்னை ban பண்ண சொல்லலாம். நீங்களாக கெட்டுப் போவதற்கெல்லாம் நான் பொறுப்பல்ல என்று ரம்மி சர்க்கிள் விளம்பரத்தில் நடித்தது குறித்து சரத்குமார் பேசி இருக்கும் சர்ச்சை பேச்சு தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னனி நடிகராக சரத்குமார் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் அரசியல்வாதி, இயக்குனர், தயாரிப்பாளர், பாடிபில்டர் என பன்முகங்களை கொண்டு இருக்கிறார். இவர் இதுவரை 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என மொழி படங்களில் நடித்து இருக்கிறார். இவர் முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் தலைவரும் ஆவார்.

இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், இவர் நடிப்புக்காக நிறைய விருதுகளையும், கலைமாமணி பட்டங்களையும் பெற்று இருக்கிறார். தற்போது இவர் விஜய்யின் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கிறார். இன்னும் சில நாட்களில் இந்த படம் வெளிவர இருக்கிறது.

  • Rajinikanth Jailer 2 announcement ரஜினியின் தரமான சம்பவம் LOADING …தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட மிரட்டல் வீடியோ…!