’விஜய் புரிஞ்சி பேசனும்..’ பாஜக பிரபலம் பரபரப்பு பேச்சு!

Author: Hariharasudhan
14 December 2024, 5:56 pm

விஜய் புரிந்துகொண்டு பேச வேண்டும் என அவரது மணிப்பூர் குறித்தான பேச்சைக் குறிப்பிட்டு பாஜக பிரமுகர் சரத்குமார் கூறியுள்ளார்.

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே நடந்த பாஜக நிகழ்ச்சியில், நடிகரும், அக்கட்சியின் நிர்வாகியுமான சரத்குமார் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது, புத்தக வெளியீட்டு மேடையில் விஜயின் அரசியல் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த சரத்குமார், “விஜய் அரசியலுக்கு வந்தது ரொம்ப ரொம்ப சந்தோஷமான ஒன்று, மகிழ்ச்சியானது என ஏற்கனவே நான் கூறொவிட்டேன். எல்லோருமே அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைப்பவன் நான். கடந்த கூட்டத்தில் பேசும் போது கூட, மும்மொழிக் கொள்கை, நீட் வேண்டாம் என்று விஜய் கூறினார்.

அதற்கு நான் பதில் அளித்து விட்டேன். தற்போது மணிப்பூர் பற்றி அவர் கூறி இருக்கிறார். மணிப்பூரில் மெய்தி, குகி என இரண்டு இன மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குள் பல ஆண்டுகளாக பிரச்னை உள்ளது. அதில் மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு, மக்கள் பாதிக்காத வகையில் சமரசத்தைக் கொண்டு வர முடியுமா என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க: கடற்கரை காவல் நிலையத்தில் இசைவாணி.. 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

அதனை இங்கு இப்படி பேசியிருக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். விஜய் கொஞ்சம் சிந்தித்துப் பேச வேண்டும். ஏனென்றால், அவரது பயணம் நன்றாக வர வேண்டும். அவர் கொஞ்சம் புரிந்து கொண்டு பேசுவது நல்லது” எனக் கூறினார். 2024 மக்களவைத் தேர்தலையொட்டி, சரத்குமார் தனது அஇசமக கட்சியை கலைத்துவிட்டு, பாஜகவோடு இணைத்தார்.

Sarathkumar on TVK Vijay speech about Manipur Violence

மணிப்பூர் பற்றி விஜய் கூறியது என்ன? கடந்த டிசம்பர் 6ஆம் தேதி தனியார் பதிப்பகம் சார்பில் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், புத்தகத்தை வெளியிட்டார்.

இதனையடுத்து பேசிய அவர், ‘மணிப்பூரில் என்ன நடக்கிறது என்று அனைவருக்கும் தெரியும்’ என்றார். மேலும், கொள்கை எதிரி என பாஜகவை விஜய் அறிவித்ததை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர். அது மட்டுமல்லாமல், தன் மீது அரசியல் சாயம் பூசப்படும் என்பதை விஜய் தனது முதல் கட்சி மாநாட்டில் கூறியிருந்தர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 96

    0

    0

    Leave a Reply