கோவை மாநகர காவல் ஆணையராக பணியாற்றிய பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ் அதிகாரியான இவர் பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு 56 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டு, சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் நிர்வாகப் பிரிவில் ஐ.ஜி யாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
அவருக்கு பதிலாக கோவை சரக டி.ஐ.ஜி யாக பணியாற்றி வரும் சரவண சுந்தர் ஐ.ஜியாக பதவி உயர்வு பெற்று கோவை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இதையும் படியுங்க: கோவையில் கவனத்தை ஈர்த்த அதிமுக போஸ்டர்… யார் அந்த SIR?
அதுபோன்று கோவை மாநகர வடக்கு துணை ஆணையராக பணியாற்றி வரும் ஸ்டாலின் மாற்றப்பட்டு கன்னியாகுமரி மாவட்டம் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
அவருக்கு பதிலாக சென்னை லஞ்ச ஒழிப்பு துறையில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் தேவநாதன் கோவை மாநகர வடக்கு துணை ஆணையாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
கோவை மாநகரத்திற்கு துணை ஆணையர் சரவணகுமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு சென்னை தெற்கு மண்டலம் பொருளாதார குற்றப்பிரிவில் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இது தவிர தமிழகத்தில் மொத்தம் 56 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டு உள்ளார்.
பிரபல நடிகைக்கு மது அருந்த வத்து குடிகாரியாக மாற்றிய அவரது கணவர் மற்றும் நடிகரை விவாகரத்து செய்த விவகாரம் வெளிச்சத்திற்கு…
மாநில உரிமை பற்றிப் பேசும் தமிழக அரசால் சாதிவாரிக் கணக்கெடுக்க முடியவில்லை என நாதக சீமான் கூறியுள்ளார். மதுரை: நாம்…
சென்னையில், இன்று (மார்ச் 21) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 40 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 270…
தூத்துக்குடி ரவுடி ஐகோர்ட் மகாராஜாவை போலீசார் இன்று சென்னை கிண்டி அருகே சுட்டுப் பிடித்து, துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர். சென்னை:…
தனது வெளிநாட்டு நண்பர்களை குடியுரிமை அதிகாரிகள் மிகவும் கீழ்த்தரமாக நடத்தியதாக பிரபல ராப் பாடகர் அசல் கோலார் குற்றம் சாட்டியுள்ளார்.…
தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் 80களிலும் 90களிலும் முன்னணி நடிகையாக ரசிகர்களின் மனதை கைப்பற்றியவர் நடிகை ரேவதி.தனது தனித்துவமான நடிப்பால்…
This website uses cookies.