‘அந்த சேலை எவ்வளவு..?’ … வகுப்பறையில் சேலை விற்பனை அமோகம்.. பாடம் நடத்துவதை மறந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள்..!!

Author: Babu Lakshmanan
16 August 2023, 5:07 pm

அரசுப் பள்ளியில் குழந்தைகளுக்கு பாடம் நடத்தாமல் சேலை வாங்கும் ஆசிரியர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவுவில் சிங்கய்யன்புதூர், 10 நம்பர் முத்தூர், கோதவாடி, தாமரை குளம், கோவில்பாளையம், முள்ளு பாடி, அரசம்பாளையம், பகவதி பாளையம், வீரப்ப கவுண்டனூர் என சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பள்ளி குழந்தைகள் கிணத்துக்கடவு அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.

இப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ளது, 1500 மாணவ, மாணவிகள் உள்ளனர். பள்ளியில் 65 ஆசிரியர்களும், தலைமை ஆசிரியராக தேன்மொழி என்பவரும் பணியாற்றி வருகின்றார்.

இந்த நிலையில், பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு பாடம் நடத்தாமல் சேலை வாங்கும் மும்மரத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ள சம்பவம் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி வகுப்பறையில் ஆசிரியர்கள் சேலை வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வருகிறது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!