ஈரோடு இடைத்தேர்தலில் ‘சர்கார்’ பட சம்பவம்… பெண்ணின் வாக்கை செலுத்தியது யார்?
Author: Udayachandran RadhaKrishnan5 February 2025, 1:22 pm
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் காலை ஏழு மணி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது 11 மணி நேர நிலவரப்படி 26.03% வாக்குபதிவு நடைபெற்றுள்ளது.
இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு போது வளையக்காரன் வீதியில் ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் 168 -பூத்தில் பரிதாபேகம் என்பவர் கணவர் ஜாபருலாவுடன் வாக்கு செலுத்த வந்தனர்.
இதையும் படியுங்க: தேர்தலை புறக்கணித்த பாஜக.. ஈரோடு இடைத்தேர்தலில் வாக்களித்த பாஜக எம்எல்ஏ.. அந்த வார்த்தை தான்!
கணவன் வாக்களித்த நிலையில் பரிதாபேகம் வாக்கு செலுத்த சென்றபோது,ஏற்கனவே வாக்கு செலுத்தியதாக வாக்குச்சாவடியில் உள்ள அலுவலர் முகவர்கள் தெரிவித்ததால் அதிர்ச்சி அடைந்தார்.
கணவனுடன் வாக்களிக்க தற்போது வந்துள்ளேன் எனது வாக்கை மற்றவர்கள் எப்படி வாக்களிக்கலாம் என வாக்குச்சாவடி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறையிட்டு குற்றச்சாட்டு வைத்தார்.
தொடர்ந்து முறைகேடுகளை கண்டறிந்து மீண்டும் வாக்களிக்க வழிவகை செய்யுமாறு கூறினார். அதனைத் தொடர்ந்து வாக்குச்சாவடி தேர்தல அலுவலர் இது குறித்து பரிசீலனை செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.
இதனால் வாக்களிக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர் இதனால் 49ஓ முறை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். வாக்களிக்க வந்த பெண்ணின் ஓட்டு மற்றவர்கள் வாக்களித்த சம்பவம் வாக்குச்சாவடி மையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.