சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு : விசாரணையை மே 6ம் தேதிக்கு ஒத்திவைத்தது மதுரை மாவட்ட நீதிமன்றம்!!

Author: Babu Lakshmanan
28 April 2022, 8:35 pm

தூத்துக்குடி : சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணையை மே -6 ஆம் தேதிக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்தது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் – பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில், விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.

இருவர் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையானது இன்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகலட்சுமி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது காவலர் முருகன் தரப்பில் ஜாமின் கோரப்பட்டது தொடர்பாக விசாரணை நடைபெற்றது.

இதனையடுத்து, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மே 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

  • Ajithkumar racing நீங்க படத்த பாருங்க.. நான் ரேஸ பாக்குறேன்.. அஜித்தின் வீடியோ வைரல்!