சாலையில் ஆட்டம் காட்டிய காட்டு யானை-பீதி அடைந்த வாகன ஓட்டிகள்!

Author:
29 June 2024, 4:42 pm

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கேர்மாளம் வனச்சாலையில் காரை துரத்திய ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் யானை,புலி, சிறுத்தை, கரடி ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனகோட்டத்திற்கு உட்பட அரேப்பாளையத்திலிருந்து கேர்மாளம் வரை சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அடர்ந்த வனப்பகுதிக்குள் வனச்சாலை செல்கிறது .இந்நிலையில் இன்று காலை கேர்மாளம் செல்லும் வழியில் உள்ள கெத்தேசால் மலை கிராமம் அருகே வனச்சாலையோர மரங்களில் இருந்த மரப்பட்டைகளை உரித்து தின்று கொண்டிருந்த ஒற்றை காட்டு யானை ஒன்று திடிரென்று அவ்வழியாக வந்த கார் ஒன்றை துரத்த வந்தது. இதனால் அந்த வாகன ஓட்டி அதிவேகமாக வாகனத்தை இயக்கி சென்று தப்பிச் சென்றார்.வெகு நேரம் அந்த ஒற்றை யானை அங்கேயே இருந்ததால் சுமார் அரை மணி நேரம் சாலையை கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் காத்திருந்தனர்.சிறிய நேரத்திற்கு பின் அந்த யானை வனத்திற்குள் சென்றது.இதனால் அவ்ழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சத்தில் வாகனங்களை ஓட்டி வருகின்றனர்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…