வண்டி முழுக்க பெண் காவலர்கள்…. கோவையில் இருந்து திருச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட சவுக்கு சங்கர்…!!!

Author: Babu Lakshmanan
15 May 2024, 1:10 pm

கோவை சிறையில் இருந்து திருச்சி நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்படும் சவுக்கு சங்கர், முழுக்க முழுக்க பெண் காவலர்களின் பாதுகாப்பில் அழைத்து செல்லப்பட்டார்.

காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்களை தரக்குறைவாக பேசிய வழக்கில் ஏற்கனவே சவுக்கு சங்கரை காவல்துறையினர் தேனியில் வைத்து கைது செய்தனர். அதனை தொடர்ந்து, சவுக்கு சங்கரை நேர்காணலை ஒளிபரப்பிய ரெட்பிக்ஸ் இணையதளத்தில் உரிமையாளர் கடந்த 10ம் தேதி இரவு டெல்லி கைது செய்யப்பட்டார். பின்னர், திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் படிக்க: நியாயமான உணர்வுக்கும்‌ மதிப்பளியுங்க… உரிமையில் பேசுவது ரொம்ப காயப்படுத்துது ; ஜிவி பிரகாஷ் உருக்கம்..!!

இதை தொடர்ந்து இன்று காலை கோயம்புத்தூரில் இருந்து சவுக்கு சங்கரை திருச்சி மகிளா நீதிமன்றத்தில் ஆசைப்படுத்துவதற்காக காவல்துறையினர் அழைத்து வந்து கொண்டிருக்கின்றனர். இதன் காரணமாக நீதிமன்றம் முழுவதும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தாலும், குறிப்பாக பெண் காவலர்கள் பாதுகாப்பணியில் அதிக அளவு குவிக்கப்பட்டுள்ளனர்.

அவரை அழைத்துச் செல்லப்பட்ட வாகனங்களிலும் முழுக்க முழுக்க பெண் காவலர்களே இருந்தனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி