சவுக்கு சங்கர் கேட்ட ஜாமீன்… வழக்கறிஞர் சொன்ன முக்கிய தகவல் : நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!
Author: Udayachandran RadhaKrishnan27 May 2024, 11:45 am
தேனி மாவட்டம் PC பட்டி காவல்துறையினரால் கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் யூடிபர் சவுக்கு சங்கர் தனக்கு ஜாமின் வழங்க கோரிய மனு மீதான விசாரணையை மே 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கால அவகாசம் கோரியதால் வழக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி செங்கமலச்செல்வன் உத்தரவு.
மேலும் படிக்க: வாரத் தொடக்கமே இப்படியா.. தங்கம் விலை அதிரடி உயர்வு : இன்றைய விலை நிலவரம்!
கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்க கூடாது என கூறி குறிஞ்சியர் பெண்கள் ஜனநாயக பேரவை பவானி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அதை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.