சவுக்கு சங்கரை தூக்கில் போடுங்க… நீதிமன்றத்தில் ஒழித்த முழக்கம் ; மதுரையில் பரபரப்பு..!!!

Author: Babu Lakshmanan
22 May 2024, 4:10 pm

கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்ற காவலை ஜூன் 5ஆம் தேதி வரை நீடித்து போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரபல யூடியுபர் சவுக்குசங்கர் தேனி மாவட்டத்தில் தங்கியிருந்தபோது தனது அறையில் கஞ்சா வைத்திருந்ததாக PC பட்டி காவல்துறை தரப்பில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், சவுக்கு சங்கருக்கு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கடந்த 20ஆம் தேதி அனுமதி அளித்திருந்தது.

மேலும் படிக்க: ‘CM ஸ்டாலின் அறிவிச்சு 3 வருஷம் ஆச்சு… இது கூடவா போக்குவரத்துத் துறைக்கு தெரியல’ ; காவலர்களுக்கு ஆதரவாக அண்ணாமலை வாய்ஸ்!!

இந்த நிலையில், 2 நாட்கள் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று மீண்டும் மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்குசங்கர் நீதிபதி செங்கமலசெல்வன் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சவுக்கு சங்கருக்கு ஜூன் 5ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீடித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதனிடையே, காவல்துறை துன்புறுத்தில் இருந்ததா…? என நீதிமன்றம் தரப்பில் கேள்வி எழுப்பியபோது, தனக்கு விசாரணையின் போது காவல்துறையினர் எந்த துன்புறுத்தலும் கொடுக்க இல்லை என சவுக்கு சங்கர் பதிலளித்தார்.

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட பின்னர் கோவை சிறைக்கு சவுக்கு சங்கரை காவல்துறையினர் அழைத்துசென்றபோது, மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கலைச்செல்வன் என்பவர் சவுக்கு சங்கருக்கு எதிராக சவுக்கு சங்கர் ஒழிக என கண்டன முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சவுக்கு சங்கரும், பெலிக்ஸ்சும் முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறாக பேசியதாகவும், இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சவுக்கு சங்கரை தூக்கில் போட வேண்டுமெனவும் முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் சவுக்கு சங்கரை கோவைக்கு அழைத்துசென்றனர்.

  • Maharaja movie box office in China பிரமாண்டத்தை ஓரங்கட்டிய விஜய் சேதுபதி.. சீன பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டும் VJS!
  • Views: - 277

    0

    0