எஸ்.பி.ஐ. ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயற்சி : சாலைகளில் வாகனம் வந்ததால் தெறித்து ஓடிய முகமூடி கொள்ளையன்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 May 2022, 11:52 am

கோவை : காரமடை அருகே மருதூரில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த எஸ்பிஐ ஏடிஎம் மெஷினை உடைத்து முகமூடி அணிந்த நபர் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே இருக்கக்கூடிய காரமடை அடுத்த மருதூரில் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் ஆனது உள்ளது.

காரமடை வெள்ளியங்காடு தேசிய நெடுஞ்சாலையில் இந்த ஏடிஎம் மெஷின் உள்ள நிலையில் இன்று அதிகாலை ஒன்று முப்பது மணி அளவில் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் ஏடிஎம் மெஷின் அறையில் நுழைந்து மெஷினை உடைக்க முயற்சித்துள்ளார்.

சுமார் ஐந்து நிமிடங்களாக அந்த மர்மநபர் ஏடிஎம் மிஷினில் சில பகுதிகளை உடைத்து உள்ளே இருந்த பணத்தை எடுக்க முயற்சித்துள்ளார். இருப்பினும் பணத்தை எடுக்க முடியவில்லை.

இதனை அடுத்து சாலையில் சில வாகனங்கள் வருவதை கண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இன்று காலை ஏடிஎம் மெஷின் உடைத்து இருப்பதைக் கண்டு அந்த பகுதி மக்கள் காரமடை காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்

தகவலின்பேரில் காரமடை காவல் நிலைய ஆய்வாளர் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் மர்ம நபரை முகமூடி அணிந்து ஏடிஎம் மிஷினை உடைக்க முயற்சித்த காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளின் அடிப்படையில் தற்போது காரமடை போலீசார் இந்த திருட்டு சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து மேல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மக்கள் நடமாட்டம் பகுதியில் ஏடிஎம் மெஷினை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்த சம்பவம் மருதூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 643

    0

    0