நிறுவனத்தின் ஆட்களை பயன்படுத்தி அதிக பரிசுகளை பெற வைத்து மோசடி? DREAM 11 மீது புகார்…!!
உள்ளூர் கிரிக்கெட் தொடங்கி சர்வதேச போட்டிகள் வரையிலும் மற்றும் கபாடி லீக் ,புட்பால் லீக் உள்ளிட்டபோட்டிகளின் போது ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடரை குறிவைத்து பல்வேறு மொபைல் ஆஃப் மூலமாக போட்டி நடத்தி பணம் செலுத்தி அதில் கலந்துகொண்டு வெற்றிபெறும் நபர்களுக்கான அதிகபரிசுத்தொகை வழங்கப்பட்டுவருகிறது.
இதில் விளையாட தொடங்கும்போதே ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் பெறப்படுகிறது. இந்த ஆஃப்களுக்கு பிரபல கிரிக்கெட் வீரர்களும், சினிமா நடிகர்களும் விளம்பரம் செய்துவருகின்றனர்
இதில் தற்போது இந்தியா முழுவதும் பல கோடிக்கணக்கான ரசிகர்கள் விளையாடி வருகின்றனர். இந்த ஆஃப்களில் மொத்த போட்டியாளர்கள், குழுப்போட்டியாளர்கள், தனி தனி போட்டியாளர்கள் என பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டு அதற்கேற்ப பணம் கட்டி விளையாடப்படுகிறது.
மேலும் படிக்க: தந்தை மரணத்தில் திருப்பம்.. கொடூரமாக தாக்கி கொலை செய்த மகன் : பதற வைக்கும் CCTV காட்சி.!!
இதில் ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த 11 வீரர்களை தேர்வு செய்து பணம் கட்டினால் அன்றைய போட்டியின் போது பணம் கட்டி தேர்வு செய்யப்பட்ட விளையாட்டு் வீரர்கள் போட்டியில் கலந்துகொண்டு ஆடும் ஒவ்வொரு ரன், கேட்ச்,விக்கெட் என அதற்கேற்ப ஸ்கோர் வழங்கப்படும் அதனடிப்படையில் போட்டி முடிவடைந்த பின்னர் மொபைல் ஆஃ்ப் மூலமாக வெற்றியாளர்கள் பட்டியல் வெளியாகும்.
இதில் நாள்தோறும் ஒவ்வொரு போட்டிகளிலும் நாடுதோறும் பல கோடிக்கணக்கானோர் 20 ரூபாய் தொடங்கி 5 லட்சம் வரை பணம் செலுத்தி விளையாடிவருகின்றனர். இந்த விளையாட்டி தொடர்பான ஆஃப்களில் பிரபலமான மொபைல் செயலியான DREAM -11 ஆஃப் மீது பயனாளிகளை ஏமாற்றி மோசடி செய்வதாக புகார் எழுந்துள்ளது.
DREAM 11 ஆப்பில் ஒரே பெயர்களுடைய ஏராளமான நபர்கள் கோடிக்கணக்கான போட்டிகளில் கலந்துகொள்வது போல சாப்ட்வேர் மூலமாக முறைகேடாக 200 போட்டியாளர்களை போல சொந்த நிறுவனத்தின் ஆட்கள் பெயரில் விளையாடவைத்து தொடர்ந்து மோசடி நடத்தப்பட்டுவருவதாகவும் இவர்களுக்கு முதல்பரிசுபெறும் வகையில் நாள்தோறும் கோடிக்கணக்கான ரூபாயை பொதுமக்களின் பணத்தை ஏமாற்றிவருவதாகவும், மேலும் இதுபோன்ற நபர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை முறையாக செலுத்துகிறார்களா என சந்தேகம் எழுந்துள்ளதாகவும், இது போன்ற பொதுமக்களை ஏமாற்றும் Dream -11 நிறுவனத்தில் மோசடி குறித்து இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டியை சேர்ந்த கல்யாணகுமார் என்பவர் தமிழக காவல்துறை தலைவருக்கு புகார் அளித்த நிலையில் இன்று மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார்.
இது குறித்து பேசிய கல்யாண குமார் : DREAM11 ஆப் மூலமாக பொதுமக்களின் பணத்தை நிறுவனத்தின் ஆட்களை வைத்து அதிக போட்டிகளில் விளையாடவைத்து பல ஆயிரம் கோடி ரூபாய்மோசடி நடைபெற்றுவருவதால் இது குறித்து முழுமையான உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நித்தியானந்தா கர்நாடகாவில் தனக்கென தனி சீடர் கூட்டத்தை உருவாக்கி ஒரு ஆசிரமத்தை எழுப்பினார். ஆன்மீக சொற்பொழிவாற்றி…
யூட்யூப் பிரபலம் Food Vlogger இர்ஃபானை தெரியாத நபர்களே இருக்கமாட்டார்கள். அந்தளவுக்கு இணையவாசிகளின் மத்தியில் மிகப் பிரபலமான யூட்யூபராக வலம்…
குரூப் 1 மற்றும் குரூப் 1 ஏ பணிகளுக்கான தேர்வு பற்றி அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. குரூப் 1 தேர்வுக்கு…
தங்கம் என்ற சொல்லை உதட்டளவு இனி உச்சரிக்கத்தான் முடியும் என்பது போல தினமும் விலை தாறுமாறாக உயர்ந்து வருவது இல்லத்தரசிகளை…
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
This website uses cookies.