குதிரைகளை வளர்ப்பதில் நூதன மோசடி : ரூ.2.5 கோடி ஏப்பம் விட்ட தந்தை, மகன்கள் அதிரடி கைது!!
Author: Udayachandran RadhaKrishnan14 December 2022, 10:18 pm
குதிரைகள் வளர்ப்பதாக கூறி ரூ.2.5 கோடி மோசடி செய்த தந்தை, மகன்கள் 2 பேர் என 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துபாயில் வசித்து வரும் கேரள மாநிலத்தை சேர்ந்த ஜெயா நாயர் என்பவர் அளித்த புகாரில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஊஞ்சவேல்ம்பட்டியை சேர்ந்த தந்தை சீனிவாசன், மகன்கள் ஹரிவராசன், அரவிந்த் கிருஷ்ணன் ஆகிய 3 பேரை கோவை மாவட்ட குற்றப்பிரிவினர் கைது செய்தனர்.
விசாரணையில் ஜெயா நாயர் பல்வேறு வகையான குதிரைகளை இந்தியாவில் பல இடங்களில் பண்ணை அமைத்து விற்பனை செய்து வரும் நிலையில், ஹரிவராசன் தாங்கள் குதிரைகளை பராமரித்து தருவதாக கூறி 15 வகையான குதிரைகளை பெற்று மோசடி செய்துள்ளனர்.

ஜெயா நாயரிடம் பெற்ற 15 குதிரைகளில் 4 குதிரைகளை மோசடியாக விற்பனை செய்ததுடன், குதிரையின் பராமரிப்பிற்காக மாதந்தோறும் ஜெயா நாயர் வழங்கிய ரூ.2.5 கோடி பணத்தை மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.